வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். 14, 15-ம் தேதிகளில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென் தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது....
கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பார்க் டவுன் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்ல தொடங்கின
admin - 0
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில், பார்க் டவுன் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்வதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்
சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளிலிருந்து நேரடியாக பறக்கும் ரயில்...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும்: தமிழக அரசு அறிக்கை
admin - 0
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி, ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து,...
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இயங்கும் விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி வாயுக்கசிவு காரணமாக 39 மாணவிகள் மயங்கியதால் பள்ளிக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. விடுப்பு முடிந்து தனியார் பள்ளி கடந்த நவ.4-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போதும் சில வகுப்பறைகளில் மாணவர்களுக்கு மீண்டும் வாயு நெடி உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 பேர் வரை மயங்கியதால் பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மாசுக்...
காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திருநங்கைகளால் அப்பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் மந்த்ரா.
திருநங்கையான இவர், சமூக ஊடகங்களில் திருநங்கை தலைவிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை நேற்று 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒரே நேரத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த வேப்பேரி...
பழ.நெடுமாறனின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
உலகத்தமிழ் பேரமைப்பின் நிறுவனரும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேற்று முகாம் அலுவலகம் சென்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் வெளியில் வந்து பழ.நெடுமாறனை வரவேற்று, கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா டிச.29-ம் தேதி சென்னையில் நடைபெறுவதாகவும்,...
ஒரத்தநாடு அருகே அரசு பள்ளியில் வகுப்பில் பேசிய மாணவர்களின் வாயில் ‘டேப்’: நடவடிக்கை கோரி பெற்றோர் மனு
admin - 0
ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் வகுப்பறையில் பேசாமல் இருப்பதற்காக மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த அக்.21-ம் தேதி 4-ம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டி 2 மணி...
சென்னையில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி இன்று (நவ.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (செவ்வாய்க் கிழமை) காலை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 4 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 2.4 செ.மீ, நந்தனத்தில் 4.5 செ.மீ, அண்ணா பல்கலையில் 4.4 செ.மீ, தரமணியில் 4.0 செ.மீ என மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில்,...
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம்போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர்,...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: கச்சேரி சாலை அருகே எரிவாயு கசிவால் சுரங்கப்பாதை பணி தற்காலிகமாக நிறுத்தம்
admin - 0
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4 -வது வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் மெட்ரோ சுரங்கப்பணி நடைபெற்றுவரும் நிலையில், கச்சேரி சாலை அருகே எரிவாயு கசிவு காரணமாக, சுரங்கப்பாதை பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில்கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும்....










