ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள்: கரசங்காலில் நாடாளுமன்ற நிலை குழுவினர் ஆய்வு
admin - 0
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கரசங்கால் மற்றும் எழிச்சூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கரசங்கால், எழிச்சூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் மற்றும் ஒடிசா மாநிலத்தின் கோராபுட் தொகுதி எம்.பி....
பணியின் போது உயிரிழந்த சென்னை - மணலி போக்குவரத்து தலைமை காவலரின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று திருவொற்றியூரில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை - திருவொற்றியூர் சக்தி கணபதி நகரை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (45). இவர், ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட மணலி போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். ஜெய்கிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஜெய்கிருஷ்ணன்...
உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன.15) காலை 7.40 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் 1,000-க்கும்மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளன்று மதுரை அவனியாபுரத்தில் நேற்று சிறப்பாக...
தொழிலாளர் நல துறை சார்பில் ரூ.27.33 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
admin - 0
தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.27.33 கோடியில் கட்டப்பட்ட அலுவலகங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ரூ.3.71 கோடியிலும், ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் கிராமத்தில் ரூ.4.42 கோடியிலும் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்று வரை 9 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக...
கருத்து வேற்றுமைகள் மக்களுக்கு பலன் தராது: ஆளுநரும், முதல்வரும் பேசி முடிவெடுக்க வேண்டும் – தமிழிசை
admin - 0
கருத்து வேற்றுமைகள் மக்களுக்கு பலன் தராது. எனவே, ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசி மாநில பிரச்சினைகளுக்காக முடிவெடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்தினர் மற்றும் கட்சியினரோடு பொங்கல் கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பொங்கல் பரிசோடு சாமானிய மக்களுக்கு பொங்கல் விழா ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்துடன் ஆரம்பித்திருக்கிறது....
கோயில் நிலத்தில் ஞானசேகரன் கட்டிய வீட்டை அகற்றுவது குறித்து ஆலோசனை: அமைச்சர் சேகர்பாபு தகவல்
admin - 0
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தில் கட்டியுள்ள ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் பணியாளர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் கருணை கொடை வழங்கும் திட்டத்தை, சென்னையில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். 16 பேருக்கு ரூ.1,000-க்கான காசோலைகளை வழங்கினார்.
அப்போது, செய்தியாளர்களிடம்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிளில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புகைமண்டலமாக காட்சி அளித்தது. தை முதல் நாளில், தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் இன்று (ஜன.14) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் மார்கழியின் கடைசி நாளான நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் வீட்டில் இருந்த தேவையற்ற...
அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜகவும் புறக்கணிப்பு: காரணம் என்ன?
admin - 0
அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து, பாஜகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதியும் நடைபெற உள்ளது.
திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவித்துள்ளன. பொங்கல் நாளில் வேட்பாளரை அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே,...
வெளிநாடுகளில் தமிழ் மொழி, கலைகள் பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
admin - 0
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலக தமிழர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, உலகம் முழுவதிலும்...










