Google search engine
பொங்கல் விழா நாளை (ஜன.14-ம் தேதி) கொண்டாடப்பட இருக்கும் நிலையில், விடுமுறை நாளான நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வட சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து, அவர்களின் விருப்பத்தை கேட்டு புத்தாடைகளை வாங்கிச் சென்றனர். வடசென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்ட கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர். அப்பகுதியில் உள்ள...
திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் சென்னையில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. பொங்கல் திருநாள் நெருங்கிவிட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சென்னையில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம் தொகுதி திமுக சார்பில் பொங்கல் விழா வியாசர்பாடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், எபினேசர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி மற்றும் தொண்டர்களுடன் இணைந்து...
பபாசியின் சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்தாண்டு ரூ.20 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான 48-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற...
பழவேற்காடு அருகே மேல் அவுரிவாக்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டையுடன் பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள மேல் அவுரிவாக்கம் மீனவ கிராமத்தில் நேற்று தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்றார். விழாவுக்கு வந்த அவரை கிராம பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஆளுநருக்கு...
கடலில் பாலம் கட்டும் திட்டத்துக்கு மீனவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீனவர் சங்க பிரதி​நி​திகள் கு.பாரதி, கோ.சு.மணி ஆகியோர் கூறிய​தாவது: கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடல் பகுதி​யில் பாலம் கட்டப் போவதாக தமிழக அரசு தெரி​வித்​துள்ளது. இப்பாலம் கட்டப்​பட்​டால் 5 ஆயிரம் மீனவர் குடும்​பங்​களின் வாழ்​வா​தாரம் பாதிக்​கப்​படும். வரும் 2050-ம் ஆண்டுக்​குள் கடல் மட்டம் உயரும் என பல்வேறு ஆய்வுகள் தெரி​வித்துள்ளன. மேலும், கடற்​கரை​யில் கட்டுமான பணிகள்...
தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு இலங்கை கடல் மற்றும் அதையட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 16, 17-ம்...
பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும்...
பெரியார் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திக, திமுக, தபெதிக உள்ளிட்ட கட்சியினர் அளித்துள்ள புகார்களின் பேரில், 11 மாவட்டங்களில் சீமான் மீது 62 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகின. இதைத் தொடர்ந்து,...
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பு பேருந்துகளின் சேவை நேற்று முதல் தொடங்கியது. ஒரேநாளில் 1.50 லட்சம் பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 1,560 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சென்னையைப் பொருத்தவரை 3 இடங்களில் இருந்து 1,445 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது....
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தாக்குதல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் 2 சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 2 மசோதாக்களும் இன்று விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட...