சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், கோவையில் தனியார் மதுபான ஆலை, கரூரில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு என 10 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து...
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 7) முதல் வரும் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். வரும் 10-ம் தேதி...
எம்ஜிஆர் நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற தமிழிசை சவுந்தரராஜனை 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் சிறை பிடித்தனர். அவரை விடுவிக்க கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக பாஜக சார்பில் சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடம்...
பிரபல கர்னாடக இசை மேதை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதை, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கி கவுரவித்தார். சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல இசை மேதையும் மிருதங்க கலைஞருமான ‘பத்மபூஷண்’ டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கர்னாடக இசைத் துறையில் அவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. முன்னாள்...
மரபுவழி, நவீன பாணி ஓவிய, சிற்ப கலைகளில் திறமைமிக்க 6 கலைஞர்களுக்கு ‘கலைச் செம்மல்’ விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மரபுவழி மற்றும் நவீன பாணியில் திறமைமிக்க ஓவிய, சிற்பக் கலைஞர்கள் 6 பேருக்கு தமிழக கலை, பண்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் ‘கலைச்செம்மல்’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன், செப்பு பட்டயம், ரூ.1 லட்சம் விருது தொகை, பாராட்டு சான்றிதழ் ஆகியவையும்...
தமிழர் முன்னேற்றக் கழகத்தினர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில், அக்கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். நாம் தமிழர் கட்சியில் 2009 முதல் 2011 ஜனவரி மாதம் வரை சென்னை மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த க.அதியமான், அப்போது ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக வெளியே தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வந்தார். தமிழினம் சார்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்த தமிழர் முன்னேற்றக் கழகம்...
தமிழக ஐபிஎஸ் அதிகாரியான சுதாகர், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல் பிரிவின் கூடுதல் ஆணையராக பணியிலிருப்பவர் ஆர்.சுதாகர் . இவர், மத்திய அரசு பணிக்கு செல்ல அண்மையில் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதை தமிழக அரசு ஏற்று சிபாரிசு செய்தது. இந்நிலையில், சுதாகரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஜெனரலாக...
ஹோலி பண்டிகை முன்னிட்டு சொந்த நகரங்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - சந்த்ரகாச்சி சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து மார்ச் 8, 12 (சனிக்கிழமை, புதன்) ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு (வாரம் இருமுறை சிறப்பு ரயில்-06077) புறப்பட்டு, 3-வது நாள் (முறையே திங்கள், வெள்ளிக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம்...
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதையில் ஆய்வு நடைபெற உள்ள நிலையில், வைகை, பல்லவன், செந்தூர் விரைவு ரயில் உள்பட 20 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16116), செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே...
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பேசி முடிக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சார்பில் சென்னை பல்லவன்...