சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.
இதனால், லண்டனிலிருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், மஸ்கட்டிலிருந்து 252 பயணிகளுடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை பெங்களூருவுக்கும் மற்றும் ஐதராபாத்திலிருந்து 162 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், புனேவிலிருந்து 152 பயணிகளுடன் வந்த இண்டிகோ...
30 தோட்டாக்களுடன் சாலையில் கிடந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி மெகஸினால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், சம்பந்தப்பட்ட தோட்டாக்கள் ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சிஆர்பிஎப் வீரருடையது என தெரியவந்தது.
சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரம், எம்இஎஸ் சாலை, மோதிலால் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ் (34). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, சென்னை நந்தம்பாக்கம், மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ராமாபுரம்...
காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும்: அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
admin - 0
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் முடிவானது காப்பீட்டு நிறுவனங்களை மட்டுமின்றி, பாலிசிதாரர்கள், நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்று அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் தெரிவித்தார்.
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவை 100 சதவீதம் உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காப்பீட்டு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
ஞானசேகரனிடம் நாளை குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்ய ஆய்வகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஞானசேகரனிடம்...
மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் மில்க் காலனியை 4 மாதங்களில் காலி செய்து கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை மாதவரம் மில்க் காலனியை 4 மாதங்களில் காலி செய்து கொடுக்க குடியிருப்பு வாசிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஆவின் பால் சப்ளை செய்வதற்காக மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் கடந்த 1959-ம் ஆண்டு மாட்டுக்கொட்டகை அமைக்க அரசு நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. அந்த நிலத்தின் அருகிலேயே மாடு வளர்ப்போர் தங்கிக்கொள்ள எம்.எம்.காலனி என்ற மாதவரம் மில்க் காலனி பகுதியும் உருவானது.
இந்நிலையில் மெட்ரோ ரயில்...
பின்தங்கிய, கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் சேவையை எளிதாக வழங்கும் நோக்கில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மக்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், தொலைதூரம் மற்றும் கிராமப் பகுதிகளில்...
பனகல் பூங்கா – கோடம்பாக்கம் தடத்தில் ‘பெலிகன்’ இயந்திரத்தின் சுரங்க பணி ஜூனில் முடியும்: அதிகாரிகள் தகவல்
admin - 0
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான தி.நகர் பனகல் பூங்கா - கோடம்பாக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘பெலிகன்’,ஜூன் மாதத்தில் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகே பணியை முடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், ஒரு...
மாணவி பாலியல் வழக்கில் போலீஸார் பறிமுதல் செய்த பத்திரிகையாளர்களின் செல்போனை திருப்பி கொடுக்க உத்தரவு
admin - 0
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் மொபைல் போன்களை திருப்பி கொடுக்க தனிப்படை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிடக்கோரி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் எம்.அசீப் மற்றும் சில பத்திரிகையாளர்கள் தரப்பில்...
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த...
மக்களவை உறுப்பினருக்கு மரியாதை தரவில்லையா..? – திகுதிகு சர்ச்சையில் திமுக மாவட்டச் செயலாளர்
admin - 0
2024 மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி கிட்டும் என அதிமுக தீர்க்கமாக நம்பிய தொகுதி கள்ளக்குறிச்சி. அப்படிப்பட்ட தொகுதியில் திமுக வலுவான வேட்பாளரை தேடிப்பிடித்து நிறுத்தும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பேரூர் கழகச் செயலாளரான மலையரசனை நிறுத்தியது திமுக.
இவரை அடையாளம் காட்டியவர் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன். புதுமுகம் என்றபோதும், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார் மலையரசன். இப்போது,...










