Google search engine
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்றார். அப்போது முதல்வரிடம் ஏராளமானோர் கோரிக்கை மனு அளித்தனர். ஒருவர் முதல்வரிடம் பேச முற்பட்டார். ‘அவரிடம் என்ன வேண்டும்?’ என்று முதல்வர் கேட்டார். அதற்கு அவர், ‘எனது பெயர் சுரேஷ். நான் திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவன். எனது மகள் 6-வது படிக்கிறாள். அவளுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை உட்பட பல இடங்களில் காதொலி...
சென்னையில் தனியார் மூலம் இயக்கும் வகையில் 600 மின்சார தாழ்தள பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனை தயாரித்து வழங்குவதோடு, பராமரித்து இயக்க கூட்டு ஒப்பந்த அடிப்படையில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் இணையவழியில் ஏப்.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன்படி,...
போரூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததைக் கண்டித்து நோயாளிகளுடன் நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை போரூர் அடுத்த சின்ன போரூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 7 மணியளவில் புறநோயாளிகள் சீட்டு வாங்கிய ஏராளமான நோயாளிகள் மருத்துவரைப் பார்க்க காத்திருந்தனர். மருத்துவர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த நோயாளிகள் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கால் வலிக்கு சிகிச்சைக்கு...
பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020-ம் ஆண்டு மறைந்தார். அவரது புகழைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதன்மைச் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை என...
கலாஷேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கு விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும் என சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனப்பள்ளியில் கடந்த 1995 - 2001 காலகட்டத்தில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், தன்னை அந்த நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளித்தார். ஆனால் ஶ்ரீஜித் கிருஷ்ணா...
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்களின் தர்ணா போராட்டம் விடிய, விடிய நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி...
தமிழகத்தில், 19 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.7,375 கோடிக்கான புதிய முதலீடுகளுக்கு பிப்.10-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், பல்வேறு புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கவும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்.10-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்,...
தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ஏசி மின்சார ரயில் தயாரிக்கும் பணி ஐசிஎஃப்-பில் நிறைவடைந்துள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தின் விரைவுப் பாதையில் ஏ.சி. மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கடந்த 2019-ம் ஆண்டு பரிந்துரை செய்தது. இதையடுத்து, ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க சென்னை ஐசிஎஃப்-க்குரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிப்பு...
வேல் ஏந்தி காத்தருளும் தமிழ் கடவுள் முருகனின் அருள், ஞானத்துடன் நம்மை வழிநடத்தட்டும் என தைப்பூசத் திருநாளில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி: அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள். முருகனின் தெய்வீக அருள் நம்மை வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் வழிநடத்தட்டும். இந்த புனிதமான நாளில் அனைவருக்கும்...
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் தவெக தலைமை நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். இதில் தவெகவுக்கு 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் கட்சிக்கு தேர்தல் வியூகங்கள் வகுக்க பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டில், அவரை பிரசாந்த் கிஷோர் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்....