Google search engine
தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு இலங்கை கடல் மற்றும் அதையட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 16, 17-ம்...
பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும்...
பெரியார் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திக, திமுக, தபெதிக உள்ளிட்ட கட்சியினர் அளித்துள்ள புகார்களின் பேரில், 11 மாவட்டங்களில் சீமான் மீது 62 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகின. இதைத் தொடர்ந்து,...
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பு பேருந்துகளின் சேவை நேற்று முதல் தொடங்கியது. ஒரேநாளில் 1.50 லட்சம் பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 1,560 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சென்னையைப் பொருத்தவரை 3 இடங்களில் இருந்து 1,445 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது....
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தாக்குதல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் 2 சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 2 மசோதாக்களும் இன்று விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட...
சென்னையில் ரவுடி ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டினார். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்தன. உச்ச கட்டமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். முதல் கட்டமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதையடுத்து, வீடு வீடாகச்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ளது. இந்நிலையில், இதனையொட்டி...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டனர். 42 நாட்களாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி, திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை வகித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: இந்த கொலைக்கு...
திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சீமான் நேற்று கூறியதாவது: பெரியாரைப் பற்றி நாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு வருகிறோம். தமிழ் மொழி, நாயன்மார்கள், ஆழ்வார்கள், பக்தி இலக்கியம், வள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் பற்றி பெரியார் கூறிய கருத்துகளே இதற்கான ஆதாரம். அவர் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார். எந்த மொழியில்...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் (60) நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி ஒருவரை எந்த உயரத்துக்கும் கொண்டுசெல்லும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது நாராயணனின் வாழ்க்கைப் பயணம். அன்றாட தேவைகளுக்கே சிரமப்பட்ட ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் நாராயணன். நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூர் அருகேயுள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த வன்னியபெருமாள், தங்கம்மாளின் மூத்த மகன் நாராயணன். இவருடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள். 6...