Google search engine
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் காணும் பொங்கலுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ.2 கோடி வசூலாகியுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள 32 பணிமனைகளுக்கும் வசூல் கட்டணத்துக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் சென்னையில் காணும் பொங்கல் வசூல்...
தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் போன்ற பொருட்கள் சிறைக்குள் வருவது எப்படி என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குடும்பத்தினர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். முறையான சிகிச்சை...
நில அபகரிப்பு தொடர்பான வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை தனது யூடியூப் சேனல் வழியாக பரப்பியதாக சென்னை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சவுக்கு சங்கரை கடந்த டிச.24 அன்று கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் சவுக்கு...
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஜன.22-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்வதில்லை. ஏராளமான வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 1 கோடி கி.மீ வரை இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், தற்போது 80 லட்சம் கி.மீ வரை...
தமிழகத்தில் சாலைகள், மேம்பாலங்களை சரியாக அமைக்காவிட்டால், ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகளை கைது செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "சாலைகளை தவறாக குண்டும் குழியுமாக அமைப்பது...
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கரசங்கால் மற்றும் எழிச்சூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கரசங்கால், எழிச்சூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் மற்றும் ஒடிசா மாநிலத்தின் கோராபுட் தொகுதி எம்.பி....
பணியின் போது உயிரிழந்த சென்னை - மணலி போக்குவரத்து தலைமை காவலரின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று திருவொற்றியூரில் தகனம் செய்யப்பட்டது. சென்னை - திருவொற்றியூர் சக்தி கணபதி நகரை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (45). இவர், ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட மணலி போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். ஜெய்கிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜெய்கிருஷ்ணன்...
உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன.15) காலை 7.40 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் 1,000-க்கும்மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளன்று மதுரை அவனியாபுரத்தில் நேற்று சிறப்பாக...
தொழிலாளர் நலன், வேலை​வாய்ப்பு பயிற்சி துறை சார்​பில் பல்வேறு மாவட்​டங்​களில் ரூ.27.33 கோடி​யில் கட்டப்​பட்ட அலுவல​கங்​கள், மாணவர் விடுதி உள்ளிட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறப்​பட்​டு உள்ள​தாவது: தொழிலாளர் நலன், திறன் மேம்​பாட்டு துறை சார்​பில் விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ரூ.3.71 கோடி​யிலும், ராமநாத​புரம் மாவட்டம் பட்ட​ணம்​காத்​தான் கிராமத்​தில் ரூ.4.42 கோடி​யிலும் ஒருங்​கிணைந்த தொழிலாளர் நலத்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்று வரை 9 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக...