‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு முதல்வர் ரூ.48 லட்சம் காசோலையை வழங்கி பாராட்டு
admin - 0
வீர தீரச் செயலுக்காக இந்திய அரசின் ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரத்தை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.48 லட்சத்துக்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம், இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2024 டிச.19-ம் தேதி ஜம்மு -...
காலி மது பாட்டில்களை திரும்பப் பெற இயந்திரத்தை பயன்படுத்த திட்டம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
admin - 0
காலி மது பாட்டில்களை திரும்ப பெற, இயந்திரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடை முறைப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீலகிரியிலும், பின்னர், பல்வேறு மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்தியது. இதற்கிடையே, சென்னை உட்பட...
முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் ஆன்லைனில் ஆஜராக நீதிமன்றம் அனுமதி: விசாரணை ஆக.7-க்கு தள்ளிவைப்பு
admin - 0
முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் இருதரப்பினருக்கும் முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால் வழக்கு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு...
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் 200 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
முதல்வராக விஜய் பதவியேற்ற நாள் முதலே பலர் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
மேலும், டாஸ்மாக் நிர்வாகமும் கூடுதல் விலைக்கு...
பச்சிளம் குழந்தைகளின் சுவாச பிரச்சினை, தூக்கக் குறைபாடுகளுக்கு ரெயின்போ மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம்
admin - 0
சென்னையில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் சுவாச பிரச்சினைகள், தூக்கக் குறைபாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
செவித்திறன் இழப்பு, சுவாச பிரச்சினைகள், தூக்கக் குறைபாடு போன்ற பாதிப்புகள் குழந்தைகளின் பேச்சுத்திறன், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்கின்றன.
இத்தகைய சிக்கல்களுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், சென்னை கிண்டி, அண்ணாநகர் மற்றும் சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான...
ஆளுநர் உரை நிகழ்வு குறித்து ஆலோசிக்க ஸ்டாலின் தலைமையில் ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
admin - 0
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜூன் 18-ல் தொடங்க உள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் ஆலோனைக் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தவெக அரசு கடந்த மே 10-ம் தேதி பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக மே 13 ம் தேதி சட்டப்பேரவை கூடியது. வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது.
இந்த...
தவெகவினர் தற்குறிகள் அல்ல கூர்மையான அம்புக்குறிகள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். அரசியலுக்கு வருவது தொடர்பாக விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.
சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என மக்களிடம் கேட்டிருந்தேன்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ‘நீங்கள் வராமல் வேறு யார்...
கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சைக்கு கீமோதெரபி மருந்துகளான சிஸ்பிளாட்டின் மற்றும் கார்போபிளாட்டின் ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது கவலைக்குரிய ஒன்றாகும்.
இந்த தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விலை உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி யிருப்பது, மருந்து தட்டுப்பாடு என்பது உண்மையான பிரச்சினை என்பதை அரசே ஒப்புக்கொண்டிருப்பதை காட்டுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில்...
பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் பிரிவு மாணவர்கள் சென்னை அரசு கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
admin - 0
சென்னை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்கள், அரசு கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவியருக்கு 12 அரசு கல்லூரி மாணவர் விடுதிகள், 6 அரசு கல்லூரி மாணவியர் விடுதிகள் என மொத்தம் 18...
“அரசு என எதுவும் உள்ளதா?” – கும்மிடிபூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி கண்டனம்
admin - 0
அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது’ என கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
பெண்கள்...










