Google search engine
பவுர்ணமியையொட்டி பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பவுர்ணமியையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (மார்ச் 13) 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதிநாளையொட்டி… அதைத்தொடர்ந்து வார இறுதிநாள் விடுமுறையையொட்டி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம்,...
கல்விக்கு நிதி ஒதுக்க மறுப்பது மொழி உரிமை மீதான தாக்குதல் என்று திமுக எம்.பி., கனிமொழி என்.வி.என்.சோமு விர்சி்த்துள்ளார். மாநிலங்களவையில் கல்வி தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமைந்ததிலிருந்துதான் பெரும் போராட்டங்கள், பிரச்சினைகள், அர்த்தமற்ற கொள்கை முடிவுகள் போன்றவற்றால் நாட்டின் கல்வித்துறை பாதிக்கப்பட்டிருக்கிறது. கல்வி தொடர்பான விஷயங்களில் மாநில சுயாட்சியை, மாநிலத்துக்கென உள்ள அதிகாரத்தை பறிப்பது, அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளை மாற்றி, கூட்டாட்சித்...
நோயாளிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு என்னென்ன சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்நுட்பம் குறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக, அந்நிறுவனத்தின் பேராசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் சார்பில் உலக சிறுநீரக தினத்தையொட்டி ‘சிறுநீரக நோயில் ஏஐ தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. சேபியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் தலைவர் ராஜன் ரவிச்சந்திரன் தலைமை...
சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கூடு​தல் நீதிப​தி​களாக பணி​யாற்​றிய இரு​வர் நிரந்தர நீதிப​தி​களாக நியமிக்​கப்​பட்டு நேற்று பதவி​யேற்​றுக் கொண்​டனர். சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆர். சக்​திவேல், பி. தனபால் ஆகிய இரு​வரும் கூடு​தல் நீதிப​தி​களாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் நியமிக்​கப்​பட்​டனர். இவர்​கள் இரு​வரை​யும் நிரந்தர நீதிப​தி​களாக நியமிக்க உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் மத்​திய அரசுக்கு செய்த பரிந்​துரையை ஏற்று இரு​வரை​யும் நிரந்தர நீதிப​தி​களாக நியமித்து குடியரசுத் தலை​வர்...
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 11) பெரும்பாலான இடங்களிலும், நாளை தென் தமிழகத்தில்...
தமிழகத்தில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்றுப் பொருட்களை வழங்க சில நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும், அப்பொருட்கள் குறித்து 2 வாரங்களுக்குள் பரிசோதித்து பார்க்க இருப்பதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில், சென்னையை சேர்ந்த சுரேந்திரநாத் கார்த்திக், பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வரும்...
தலைமைச் செயலகம் எதிரே பள்ளி வேன் உள்பட அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். சென்னை ராஜாஜி சாலையில் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. எதிரே சாந்தோமில் உள்ள பள்ளி ஒன்றிலிருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. தலைமைச் செயலகம் எதிரே செல்லும்போது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...
வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ-க்கள் இருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த டிச.15-ம் தேதி தனியார் நிறுவன ஊழியரான முகமது கவுஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சிறப்பு எஸ்.ஐ-க்கள் ராஜாசிங், சன்னிலாய்டு மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சன்னிலாய்டு தவிர மற்ற...
தொழிற்சாலைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தவும், அதை கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளார். மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) சார்பில், 54-வது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் பேசியதாவது: தொழிலகங்களில் சிறு விபத்து நடந்தாலும்,...
மூத்த தலைவர் பழ.நெடுமாறனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தனது 93-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி முதல்வர் ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், ‘தமிழின உரிமைப் போராளியாக பழ நெடுமாறன் ஆற்றி வரும் தொண்டு தொடர்க’ என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் வாழ்த்துக்கு பழ.நெடுமாறன் நன்றி தெரிவித்துக்கொண்டார். அதேபோல்,...