93-வது பிறந்தநாள்: பழ.நெடுமாறனுக்கு முதல்வர் வாழ்த்து

0
198

மூத்த தலைவர் பழ.நெடுமாறனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தனது 93-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இதையொட்டி முதல்வர் ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், ‘தமிழின உரிமைப் போராளியாக பழ நெடுமாறன் ஆற்றி வரும் தொண்டு தொடர்க’ என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் வாழ்த்துக்கு பழ.நெடுமாறன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அதேபோல், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here