Google search engine
கவரைப்பேட்டையில் விபத்தின் போது சாதுர்யமாகச் செயல்பட்டு, பெரும் விபத்தைத் தவிர்த்த ரயில் ஓட்டுநர் சுப்பிரமணிக்கு ரயில்வே வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி பாக்மதி அதிவிரைவு ரயில் சென்றது. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே அந்த ரயில் சென்றபோது பிரதான பாதைக்குப் பதிலாக, லூப் லைன் எனப்படும் கிளைப் பாதையில் மாறி அங்கு ஏற்கெனவே...
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்​-1-ல் விமான நிலை​யத்திலிருந்து கிளாம்​பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்​பாலத்​துடன் இணைத்து நீட்​டிப்பதன் பரிந்​துரைக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் மு.அ.சித்திக் நேற்று சமர்ப்​பித்​தார். மெட்ரோ ரயில் மற்றும் மேம்​பாலச் சாலை​யின் ஒருங்கிணைந்த கட்டு​மானத்தை வழங்​குவதற்​காக, தமிழக அரசுக்கு முன்னர்...
கும்​மிடிப்​பூண்டி அருகே மேல்​பாக்கம் கிராமத்​தில் வனத்​துறைக்கு சொந்​தமான நிலத்தை ஆக்கிரமித்​துள்ள 66 வீடுகளை அகற்றும் பணியை உயர் நீதி​மன்ற தடையால் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்​தனர். திரு​வள்​ளூர் மாவட்டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள மேல்​பாக்கம் கிராமம் ஈகுவார்​பாளையம் ஊராட்​சிக்கு உட்பட்டது. இங்கு வனத்​துறைக்கு சொந்​தமாக உள்ள சுமார் 70 ஏக்கர் நிலத்​தில் பெரும்​பகு​தியை ஆக்கிரமித்து 66 வீடுகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. சுமார் 30 ஆண்டு​களுக்கு மேலாக ஆக்கிரமித்​துள்ள இந்த வீடுகளை அகற்ற...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை இலக்காக வைத்து தீவிர அரசியல் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு விழுப்புரத்தில் விஜய் நடத்திய முதல் அரசியல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். அப்போது, மத்திய,...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், ஞானசேகரனுக்கு பின்னணியில் முக்கிய நபர்கள் மேலும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதை முன் வைத்து ‘யார்...
பாலியல் குற்​றச்​சாட்​டால் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்ட இணை ஆணையர் மீது சம்பந்​தப்​பட்ட பெண் போலீஸ் வீடு கட்ட ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி பொய்புகார் அளித்​துள்ளதாக அவரது மனைவி தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவல​கத்​தில் புகாரும் அளித்​துள்ளார். சென்னை போக்கு​வரத்து காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்கு​மார், தனக்கு பாலியல் தொந்​தரவு அளிப்​பதாக பெண் போலீஸ் ஒருவர் டிஜிபி​யிடம் புகார் அளித்​திருந்​தார். இதன்​பேரில் நடத்​தப்​பட்ட...
பட்டுக்கோட்டை தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த தேர்தலில் உதயசூரியன் வெற்றி பெற்றது. எம்எல்ஏ-வாக தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரை அதிகாரத்துக்கு வந்தார். வராது வந்த மாமணியாய் தொகுதியில் உதயசூரியன் உதித்ததால் உடன்பிறப்புகள் உற்சாகமானார்கள். ஆனால், அந்த உற்சாகம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. அனை​வரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கை கைவிட்​டதால் அண்ணாதுரை எம்எல்​ஏ-வாக பொறுப்​பேற்ற நாள் முதலே அவருக்கு எதிராக கழகத்​துக்​குள்ளேயே கலகக் குரல்கள் வெடித்தன. ஆனால், அதைப்​பற்றி...
இரண்டாக இருந்த விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன் என்பது கூடுதல் தகவல். ஒரு காலத்​தில் பாமக இதேபோல் மாவட்​டங்​களைப் பிரித்து அதிகாரப் பரவலை செய்​த​போது அதை பரிகாசம் செய்த கட்சி திமுக. இப்போது அவர்களே பாமக வழிக்​குப்...
“பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருப்பது திமுக தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் கூட்டணிக் கட்சிகளுடனான நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை.” என உங்களில் ஒருவன் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தலைவர் – முதல்வர்… இப்போது “அப்பா” என்றுஅழைக்கிறார்களே? கட்சிக்காரர்கள் இயக்கத்துக்குத் தலைவரானதால், “தலைவர்” என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், “முதல்வர்” என்றும் அழைக்கிறார்கள். இப்போது இருக்கும் இளைய தலைமுறை...
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம தொழில் துறை, அமைச்சர் பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. அதுமுதல், அவ்வப்போது அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2024 செப்டம்பரில் 5-வது முறையாக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, அமைச்சராக இருந்த...