சிறுமிகளின் வீடியோக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது: ஊடகங்களுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவு
admin - 0
ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய சிறுமிகளின் வீடியோக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது என ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடியோவை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த துளிர் அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த 2025-ம் ஆண்டு கிடைத்த...
ஜெம் வீரமணி பாலியல் வழக்கை அரசியலாக்க வேண்டாம்: சமூக பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் என நீதிபதி அறிவுறுத்தல்
admin - 0
சிறுமிகள் சம்பந்தப்பட்ட ஜெம் வீரமணி பாலியல் வழக்கை இருதரப்பும் மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி அரசியலாக்க வேண்டாம். அது குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்துவிடும். சமூக பொறுப்போடு அனைவரும் நடந்து கொள்ளுங்கள் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ஜி.திலகவதி அறிவுறுத்தியுள்ளார்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிரான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிட்டதாக...
ஜெம் வீரமணி பாலியல் லீலைகளுக்கு உடந்தையாக இருந்த சாந்தி-மகேந்திர சிம்கன் தம்பதியிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை
admin - 0
ஜெம் வீரமணி பாலியல் லீலை களுக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் போலீஸார் தங்கள் காவலில் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
ஜெம் கிரானைட் வீரமணியின் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தில், அவரது உதவியாளரும் நெருங்கிய தோழியுமான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு சிறுமிகளை வீரமணியிடம் அழைத்துச்...
வண்டலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே கண்டிகையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாணவி ஒருவருக்கு மர்ம நபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்டு சர்ச்சை எழுந்தது.
அந்த மாணவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக, தாழம்பூர்...
ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா உணவகம் அமைக்க மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது: சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்ணியக்குறைவாக விமர்சித்த முதல்வருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களில் தமிழகம்...
‘தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு குறித்து எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெங்கு காய்ச்சலை ‘மர்ம காய்ச்சல்’ என்று மறைத்தவர்கள், இன்று டெங்கு குறித்து பாடம் எடுக்க வருகிறார்கள்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்து அறிக்கை என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி இறைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் பழனிசாமி....
திமுக, அதிமுக மறைமுகமாகக் கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.
மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, லோகேஷ் தமி்ழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, ‘‘இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று தனது பதவியை ராஜினாமா செய்யக் காரணமே, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிதான்.அவரால்தான்...
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட்இயந்திரங்கள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்யும் பணிகள் 2-ம் நிலை கணினி குலுக்கல் முறையில் நடைபெறுகிறது.
தாராபுரம் தொகுதியில் இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் நேற்று (செப். 24) நடைபெற் றது. இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்றும் நாளையும் (செப்.25,...
திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம்
admin - 0
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 54 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்கீழ், நேற்று ரவா கிச்சடியும், சாம்பாரும் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட ஒரு மாணவியின்தட்டில் பல்லி இறந்துகிடந்தது. இதனால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில் கிச்சடி சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 40 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 ஆம்புலன்ஸ்கள்...
திருமண மோசடிகளை தடுக்கும் வகையில் மேட்ரிமோனி தளத்தில் ஆதார் மூலம் பயனர் சரிபார்ப்பு: தமிழக அரசு அனுமதி
admin - 0
திருமணம் தொடர்பான மோசடிகளைத் தடுக்கும் வகையில், வாடிக்கையாளர்களின் அடையாளத்தை ஆதார் அடிப்படையில் சரிபார்க்க ‘மேட்ரிமோனி’ நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து சமூகநலத் துறைச் செயலர் எம். பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மேட்ரிமோனி நிறுவனத்தின் இணையதளத்தைப் பயன்படுத்தும் பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்து நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும், திருமணம் தொடர்பான மோசடிகளைக் கட்டுப்படுத்தவும் ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் சுயவிவரங்களில் ‘சரிபார்க்கப்பட்ட...









