கொள்ளை, திருட்டு வழக்கில் ஞானசேகரனுக்கு ஏப்.3 வரை நீதிமன்ற காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
admin - 0
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் ஏப்.3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மீது கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி, ஆலந்தூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்ததாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும்,...
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம்கள்: சென்னையில் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது
admin - 0
மத்திய அரசின் இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கும் ஏடிஐபி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கும் அளவீட்டு முகாம் சென்னையில் வரும் 25-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி இன்று (மார்ச் 21) அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முகாம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து திருவொற்றியூர் மண்டலத்தில் புழல் போபிலி ராஜா...
உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
admin - 0
உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதம் வருமாறு: அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி: தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளது என்று சொன்னால் அதற்கேற்ப மின்நுகர்வு அதிகரித்திருக்க வேண்டுமே. இன்னும் அதே 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் நுகர்வு செய்யப்படுகிறது.
தொழில் நிறுவனங்கள் தொடங்க பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. ஆனால்,...
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் நேற்று திடீரென 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை தடத்தில், ரயில்பாதை பராமரிப்பு பணி நடப்பதால் நேற்று 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, காலையில் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதேநேரம் சென்ட்ரல் - எண்ணூர், மீஞ்சூர் வரையில் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இருப்பினும், இந்த திடீர் அறிவிப்பால் சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, பேசின்பிரிட்ஜ், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர்...
குற்ற செயல்களை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை
admin - 0
குற்றச் செயல்களை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ ஜாகீர் உசேன் 2 தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோல் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான், ஈரோட்டில் காரில் சென்றபோது கொலை செய்யப்பட்டார். இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.இக்கொலைகளுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு...
கேமரா, எஸ்ஓஎஸ் பட்டன், நவீன தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் விரைவு பேருந்துகள் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகின்றன. போக்குவரத்துக் கழகங்களுக்கான புதிய பேருந்துகள் கொள்முதலில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டர் அடிப்படையில் 50 விரைவு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தப்பிரியன் காமராஜ் கூறியதாவது:
விரைவு பேருந்துகளில் நாளுக்கு நாள் தனியார் பேருந்துகளுக்கு...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. நாள்தோறும் பல கொலைகள் நடப்பதை பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழகம் மாறி இருப்பதைக் காட்டுகிறது. இந்த நிலைமை நீடித்தால் வன்முறையில் முதன்மை மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகத்துக்கு திமுக அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
தமிழகத்தை அமளிக்காடாக மாற்றியிருக்கும் திமுக அரசின்செயல்பாடுகள் கண்டனத்துக் குரியவை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் வன் முறையிலிருந்து...
சென்னையில் இயக்கப்படும் ஏசி பேருந்துகளில் பயணிப்பதற்கான ரூ.2 ஆயிரம் பயண அட்டையை போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 50 ஏசி பேருந்துகள் உட்பட 3,056 பேருந்துகள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஏசி பேருந்துகள் தவிர்த்து இதர பேருந்துகளில் பயணிக்கும் வகையில் ரூ.320 முதல் ரூ.1000 விலையிலான பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன.
ஏசி பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் பயண அட்டையை...
அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களை அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்து வருகின்றன.
பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய முரண்பாடுகளை களைவது, அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது, மீண்டும் ஈட்டிய விடுப்பு பலன் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் பழைய...
சென்னை மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் வரும்...










