வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத மத்திய அரசை கண்டித்து சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாபில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை, உசிலம்பட்டி, மயிலாடுதுறை, திருப்பூரில் மார்ச் 23-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்தது.
அதன்படி,...
இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மீதான தாக்குதலுக்கு, மருத்துவ அலுவலர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் விடுதி செயல்படுகிறது.
விடுதியில் தங்கியுள்ள பயிற்சி மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக இரவு 10 மணிக்கு மேல் வெளியே வந்துள்ளார்.
அப்போது அவருக்கும், அங்குள்ள காவலாளி மற்றும் ஒப்பந்த ஊழியருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பணியாளர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த...
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி, அண்ணாமலை படத்தை கழிவறையில் ஒட்டி திமுகவினர் செய்யும் அரசியல் கீழ்த்தரமானது. தமிழகத்தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுக்க ஜனநாயக வழியில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தை திமுக அரசு காவல்துறையை கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு அராஜக வழியில், அடக்க முயற்சித்து தோற்றுவிட்டது.
டாஸ்மாக் ஊழலை தட்டி...
சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயிலை திருவள்ளூர் வரை நீட்டிக்க சாத்தியமில்லை என ரயில்வே நிர்வாகம் பதில்
admin - 0
சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையை திருவள்ளூர் வரை நீட்டிப்பது தொடர்பாக பயணிகளின் கோரிக்கைக்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், இந்த ரயில் சேவையை நீட்டிப்பது தற்போது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து புறநகருக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே, கூடுதல் மின்சார ரயில் சேவைகளை...
துரித உணவுகளை சாப்பிட்டால் மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும் – உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எச்சரிக்கை
admin - 0
துரித உணவுகளை சாப்பிட்டால் பசியே இருக்காது என்றும், பீட்சா, பர்கர் போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டால் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரித்துள்ளார்.
தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், செறிவூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தெருக்கூத்து...
அதிக குற்றங்கள் நடப்பதாக திட்டமிட்டு வதந்தி: சட்டப்பேரவையில் புள்ளிவிவரத்துடன் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
admin - 0
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் 2012-ல் அதிமுக ஆட்சியில்தான் அதிகபட்சமாக 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் நடந்து வரும் கொலை சம்பவங்கள் குறித்து குற்றம்சாட்டி பேசினார். இதனால், கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து பேச அனுமதி...
தமிழகத்தில் இன்று (மார்ச் 21) முதல் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய...
போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
admin - 0
தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 8 கோட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழகங்களில் கடந்த 2015 மார்ச் மாத நிலவரப்படி 1.44 லட்சம் பணியாளர்கள் இருந்தனர். அதற்கு பிறகு புதிதாக பணி நியமனம் செய்யப்படாததால், ஓய்வுபெற்றவர்கள் நீங்கலாக தற்போது...
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை அடைத்து வைத்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், மார்ச் 25 வரை அமலாக்கத் துறை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். அந்த...
பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஆணையரகத்தில் காத்திருப்பு போராட்டம்
admin - 0
பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், பதவி உயர்வு, விருப்ப மாறுதல் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் போக்குவரத்து பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லத்தக்க...










