மேகேதாட்டுவில் படிக்கட்டு, இரும்பு கம்பிகள் நடப்பட்டு அணை கட்டுமானத்துக்காக அந்த மாநில அரசு அடையாளப்படுத்தி உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில், அந்த மாநில அரசு அணை கட்டுமானப் பணிக்காக மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள், இரும்புக் கம்பிகள், புதிதாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் உள்ளிட்ட பணிகளை பி.ஆர்.பாண்டியன் நேற்று பார்வையிட்டார். பின்னர் ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: கர்நாடக மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்...
திருவேற்காட்டில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
விழா மேடையில் இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். பிறகு அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் சீமானை பொதுவேட்பாளராக நிறுத்தி, தவெகவுக்கு நெருக்கடி கொடுக்க திமுக, அதிமுக தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த...
உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்த தமிழக அரசு திட்டம்: ஆலோசனைக்காக அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா பயணம்
admin - 0
தமிழக அரசின் சார்பில் 15 ஆண்டுகளுக்கு பிறகு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்த தமிழக அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகள் முதல்வரின்...
தவெக அரசுக்கு கவசமாகவும், கேடயமாகவும் மதிமுக இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூலை 5) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு திமுக ஆதரவு அளித்து, பழனிசாமியை முதல்வராக்குவது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது உண்மை என ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார். அவ்வாறு எடுத்திருந்தால் அதைவிட...
தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கைதானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் சம்மன் வழங்கிய நிலையில், இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடத்தப்பட்ட சிறுமி ஆட்டோ ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் மீட்பு
admin - 0
சென்ட்ரல் நிலையம் அருகே பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநில சிறுமியை கடத்திச் சென்ற பெயின்ட்டரை, ஆட்டோ ஓட்டுநர் சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தியதால், போலீஸார் சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷனிஜல் தாஸ் (56). இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருச்சியில் தங்கி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார்.
ரயில்...
அடுக்குமாடி குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்குமார் உத்தரவு
admin - 0
கண்ணகி நகர், எழில் நகர் ஆகிய திட்டப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், சீரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க வேண்டுமென, வீட்டுவசதித் துறை அமைச்சர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சென்னையை அடுத்த கண்ணகி நகர் மற்றும் எழில்நகர் பகுதிகளில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வீட்டுவசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு...
குரூப்-1 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலத் தலைவர் இரா.தமிழ்பெருமாள், முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் ஏழை, எளிய இளைஞர்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வு பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.
இதில் துணை ஆட்சியர், உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்...
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் என 10 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எஸ்எம். ஆனந்தன், எஸ்.வளர்மதி ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
இதற்கான இணைப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. அமைச்சரும், கட்சியின் பொதுச் செயலாளருமான என்.ஆனந்த், தவெக கட்சித் துண்டை அணிவித்து அவர்களை...
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்கப்படவுள்ளதாக கைத்தறித் துறை தெரிவித்துள்ளது. இதற்கான கொள்முதலுக்கு முதல்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இலவச வேட்டி-சேலை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் இந்தத் திட்டத்தை தொடரவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி 2027 பொங்கல் பண்டிகைக்கு...










