மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை தடுப்பு மீது கார் மோதி 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாப உயிரிழப்பு
admin - 0
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் கோயிலுக்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (76). இவரது உறவினர்கள் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் ( 60), இவரது தாய் வசந்தா (90), மனைவி ஆஷா ( 58), மாமியார் சுலோச்சனா ( 72) ஆகியோர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு...
தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக தர்மராஜன் நியமனம்
admin - 0
தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஐபிஎஸ் அதிகாரிகள் நிலையிலும் மாற்றங்கள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக, உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறைச்...
சென்னையில் 27 மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக 55 நகரும் படிக்கட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில், 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பாதுகாப்பான, விரைவான, சொகுசான பயணம் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது. பயணிகளின் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப, அவர்களின் தேவைகளை, வசதிகளை நிறைவேற்றுவது அவசியமாகிறது.
அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டம் மற்றும் அதன் நீட்டிப்பு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், நடப்பாண்டில் கூடுதலாக நெல் பயிரிட்டு அறுவடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்து வைத்துள்ள நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்திருந்து நெல் வழங்கும் நிலை உள்ளது. தற்போது,...
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு 2026-27 கரீப் பருவத்துக்கு 14 வேளாண் உற்பத்தி பயிர்களுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையானது வழக்கம் போல் விவசாயிகளை ஏமாற்றும் செயலாகவே உள்ளது.
கடந்த 16 ஆண்டுகளாக போராடிவரும் விவசாயிகளின் அடிப்படை கோரிக்கையான, வேளாண் ஆணையத் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரையான ‘சி 2 + 50’ (சாகுபடி செலவுடன் 50 சதவீத லாபம்) என்ற முறையிலான...
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகத்துடன், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பு
admin - 0
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக, அக்கட்சிகள் வெளியிட்ட அறிக்கைகள்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று பல லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நாளை (16-ம் தேதி) தமிழகம்...
பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவு கட்டப்பட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஏழைகளுக்கு சாதகமான சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு எப்போதுமே அக்கறை இல்லை.
இந்த நிலையில், ‘விபி-ஜிராம்ஜி’ என்ற புதிய திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை...
‘இன்று இல்லை என்றால், நாளை வெல்வோம்’ என கட்சியினருடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.
இந்நிலையில் தேர்தலில் படுதோல்வியடைந்ததை அடுத்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியினருக்கு ஆறுதல் தெரிவித்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகளவில் பகிரப்பட்டு...
திமுக கூட்டணியில் சரியான மரியாதை வழங்கவில்லை என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் வைகோவுடன் வாதிட்டனர், அவர்களை வைகோ சமாதானப்படுத்தினார்.
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து, திமுக கூட்டணிக்கும், மதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி, நீட் தேர்வு ரத்து கோரிக்கை, பி.எம். திட்டத்துக்கு எதிர்ப்பு என்பன...
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
admin - 0
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே 14ம் தேதி முகூர்த்த நாள், மே 15, 16, 17 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம்...










