Google search engine
வக்பு சட்ட திருத்தத்தில் ஏராளமான பிழைகள் இருப்பதால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என உச்ச நீதிமன்றம் நிச்சயம் அறிவிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார். வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர்...
வக்பு திருத்​தச் சட்​டத்தை கண்​டித்து ஏப்​.13-ம் தேதி நாம் தமிழர் கட்சி ஆர்ப்​பாட்​டம் நடத்த உள்​ளது. வக்பு வாரிய சட்​டத் திருத்​தத்தை திரும்​பப் பெற வலி​யுறுத்தி, நாதக சார்​பில் தமிழகம் முழு​வதும் மாவட்​ட தலைநகரங்​களில் ஏப்​.13-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும். சென்​னை​யில் நடை​பெறும் ஆர்ப்​பாட்​டத்​துக்கு கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தலைமை தாங்​கு​கிறார் என அக்​கட்சி தெரிவித்​துள்​ளது.
மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், தேசிய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில், வக்பு வாரிய சட்​டத் திருத்​தம் மூலம் நாட்​டில் பிளவு​வாத அரசி​யலை கட்​டமைக்​கின்​றனர் என்று கேரள மாநில முதல்​வர் பின​ராயி விஜயன் குற்றம்சாட்டினார். மதுரை​யில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அகில இந்​திய மாநாட்​டுப் பொதுக் கூட்​டம், மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் தலை​மை​யில் நடை​பெற்​றது. வரவேற்​புக் குழுச் செய​லா​ளர் சு.வெங்​கடேசன் எம்​.பி....
தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் தமிழகத்தில் 12 இடங்களில் சோதனை நடத்திய நிலையில், வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விதிகளுக்குப் புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான தமிழக அரசின் சிறப்பு குழுவினர் தாது மணல் குவாரிகளில் சோதனை...
தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 7-ம் தேதி (இன்று) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தென்தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு...
ஊட்டியில் அதிநவீன வசதிகளுடன் ரூ.130 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். ரூ.727 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் ஸ்டாலின் ரூ.494.51 கோடி மதிப்பிலான 1,703 முடிவுற்ற...
பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாலம் மற்றும் கப்பல்கள் அதை கடந்து செல்லும் வகையில் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ராமேசுவரம் அடுத்த பாம்பனில் பழைய ரயில் பாலத்தின் நடுவே உள்ள தூக்குப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதன் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்ட...
தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம்...
நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக...
திருவண்ணாமலை மாவட்டத்தில் முட்டை கேட்ட மாணவர் தாக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள செங்குளம் கொல்லைமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றுள்ள அநாகரிகமான சம்பவம் மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் முட்டைகளை களவாடுவது மட்டுமின்றி தனக்கு முட்டை வேண்டும் எனக் கேட்ட மாணவனை சத்துணவு சமையளர்...