விடுமுறைக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் நிறைவடைந்து, தற்போது முடிவுகளும் வந்துவிட்டன. 2025-26-ம் கல்வியாண்டுக்கான பள்ளி திறக்கும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஏழை, நடுத்தர மக்கள் அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கின்றனர். காமராஜரின் எண்ணங்கள் நிறைவேற, கல்வி அனைவருக்கும்...
பிரதமரின் பிம்பம் பலவீனமடைந்ததை மறைக்கவே நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய பாஜக அரசு அமைத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக 7 நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய அரசு அமைத்திருப்பதை வரவேற்கிறோம். நல்லெண்ணத் தூதுக் குழுக்களை அனுப்புவது என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக யூகிக்க முடிகிறது.
அதன்படி,...
திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீஸார் இருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி சமீபத்தில் நடைபெற்றது. அதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது, அனுப்பர்பாளையம் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் நிலையங்களில் காவலர்களாகப் பணியாற்றும் மந்திரம், சின்னச்சாமி ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட...
மின்மாற்றிகளை சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டிடங்களின் மாதிரிகளை அமைக்கும் சென்னை மாநகராட்சி
admin - 0
சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக மின் மாற்றியை சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டிடங்களை மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் மின் வாரியம் சார்பில் ஏராளமான மின் மாற்றிகள் சாலையோரங்களில் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக வட சென்னையில் மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அங்கு கட்டுமானக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே...
சென்னை தரமணி ராஜீவ்காந்தி சாலையில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நேற்று முன்தினம் மாலை வாடகை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் ஐடி ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர், ஓட்டுநர் ஆகியோர் பயணித்தனர்.
தரமணியில் டைடல் பார்க் சந்திப்பு அருகில், ராஜீவ்காந்தி சாலையில்...
திருவோணம் அருகே அனுமதியின்றி இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சமரத்பீவி(47). இவரது மகன் ரியாஸ்(19). இவர்கள் அதே பகுதியில் அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தனர். பின்னர், அதே இடத்தில் சணல் கொண்டு தயாரிக்கப்படும் நாட்டுவெடியை அனுமதியின்றி தயாரித்து, கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து...
சரக்குகள் கையாளுவதை அதிகரிக்க, ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, வஞ்சிபாளையம் ஆகிய 4 ரயில்வே ஷெட்டுகளை நவீனமயமாக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சரக்குகளைக் கையாளும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, சரக்கு ரயிலில் நவீன வசதிகளை ஏற்படுத்துவது, சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது....
தமிழகத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், வடக்கு கேரள பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் (மே 19),...
3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழ்நாடு அனைத்து போட்டி தேர்வு அமைப்பு வலியுறுத்தல்
admin - 0
திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, 3 லட்சம் காலி பணியிடங்களை விரைவாக நிரப்பவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துப்போட்டி தேர்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பை மற்ற 12 மாநிலங்களில் உள்ளதுபோல 49 வயது வரை உயர்த்த வேண்டும்; வெளிப்படைத்தன்மையுடன் டிஎன்பிஎஸ்சி செயல்பட வேண்டும்; தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு 20 சதவீதம் வழங்க வேண்டும்; தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும்;
முதன்மை...
இ-சேவை மைய சர்வர் முடங்குவதால் பணிகள் பாதிப்பு: மாணவர் சேர்க்கை சான்று பெற முடியாமல் பெற்றோர் அவதி
admin - 0
தமிழகம் முழுவதும் அரசின் சேவைகளைப் பெற அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் நிலையில், இ-சேவை மைய சர்வர் அவ்வபோது முடங்கி பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் மாணவர் சேர்க்கைக்கான சான்றை உரிய காலத்தில் பெற முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம், கூட்டுறவுத் துறை, எல்காட் என பல்வேறு துறைகளுக்கு அரசு இ-சேவை மையங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது....










