தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் திருப்பணி மற்றும் புனரமைப்பு பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நம்பிராஜன், சிவபாலன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையர் மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
அதன்பேரில், உயர் நீதிமன்ற மதுரை கிளை சார்பில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் மூத்த வழக்கறிஞர் ஆனந்தவல்லி மற்றும் சென்னை ஐஐடி...
’டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது’ என, பொன்னேரி அருகே ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பத்தில் நேற்று காலை தமிழக அரசின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல், முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,...
அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று, அதை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நியோமேக்ஸ் மற்றும் அதன் குழும...
முதல்வரின் குடும்பத்தைச் சார்ந்த தனி நபருக்காக விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: முதல்வர் ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கியதில் இருந்தே, ‘தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை’ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் முதல்வரின் நிழலாக இருக்கும் சபரீசன் பங்குதாரராக வகிக்கும் ‘வானம்...
தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையை சந்தித்து வருகின்றனர். காவலர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஏராளமான காவலர்கள் புகார்...
தமிழகத்தில் மகப்பேறு கால உயிரிழப்புகள் 45-ல் இருந்து, 39 ஆக குறைக்கப்பட்டுள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிந்தைய 47 நாட்களுக்குள்ளும் பெண்களுக்கு ஏற்படும் தீவிர பாதிப்புகளுக்கு உயர் சிறப்பு மருத்துவ குழு சிகிச்சை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கர்ப்பிணியர்களுக்கு தீவிர சிகிச்சையுடன் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறித்த பட்டியல், அவர்களின், பிரசவ காலத்துக்கு ஓரிரு மாதத்துக்கு...
தமிழகத்தில் இன்று (ஏப். 19) சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40...
பழநி கோயில் நிதியில் ரூ.20 கோடி செலவிட்டு ஒட்டன்சத்திரத்தில் கல்லூரி கட்ட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் இருந்து தொப்பம்பட்டியில் கட்டப்பட்டுள்ள கல்லூரியை, ஒட்டன்சத்திரம் அருகே மாற்றி, பழநி கோயில் நிதியிலிருந்து ரூ.20 கோடிக்கு மேல் செலவிட்டு நிரந்தரக் கட்டிடம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரியும் டி.ஆர்.ரமேஷ் என்பவர், சென்னை உயர்...
‘பெல் பிரதர்ஸ்’ என பத்திரிகைகள் வேடிக்கையாகச் சொல்லும் அளவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும் பி.தங்கமணியும் இணை பிரியாமல் இருந்தவர்கள். என்ன காரணமோ தெரியவில்லை, அண்மைக்காலமாக இருவரையும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்கும் போது கூட தங்கமணி தலையை பார்க்கமுடிவதில்லை.
என்னதான் ஆச்சு தங்கமணிக்கு? பாஜக-வுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று பழனிசாமி சொல்லி வந்தாலும், “நமக்கு பாதுகாப்பே பாஜக தான்....
சாதி பெயர்களை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து: உயர் நீதிமன்றம் 4 வாரம் கெடு
admin - 0
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்காவிட்டால், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, ‘‘சாதியை ஊக்குவிக்கும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்ய முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்....










