2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை அமைக்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2020 நவம்பர் 6-ல் திருப்பூர் வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காங்கயம் காளைக்கு காங்கயம் நகரின் மையப்பகுதியில் சிலை அமைக்கப்படும்” என அறிவித்தார்....
ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது. தற்போது அடுத்த அதிரடியாக பூத் கமிட்டிகளின் செயல்பாடுகளை டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாக...
நுங்கம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், உத்தமர் காந்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ. தொலைவு வரை 3-வது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள்...
பெண்களின் பாதுகாப்பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை மூத்த அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி வரவேற்றார்.
அம்மனை தரிசித்துவிட்டு கோயிலுக்கு வெளிய வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்....
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 31,000 கனஅடியாகவும், இரவு 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று 18,000 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு நேற்று மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம்...
பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்காதீர்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச (135), தேசிய (1,350), மாநில (4,293) அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 5,788 மாணவ, மாணவிகளுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை...
நல்ல திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் இடமாறுதல் செய்யப்படுவது உண்டு: நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து
admin - 0
நல்ல, திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது உண்டு என சென்னையிலிருந்து ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலாகி செல்லும் நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கும், விவேக்குமார் சிங் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வழியனுப்பு விழா நேற்று சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா தலைமையில்...
அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. இதை ஒவ்வொரு முறையும் மறுத்து வருகிறோம். ஏழை மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைவழங்கி இருக்கிறார்.
எனவே, பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. அதிமுகவை முழுவதும் ஆக்கிரமித்து, அந்த...
திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது, ‘ஓடிபி’ (ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பெற விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி, திமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் டி.அதிகரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி எண்...
“திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்!” – குஷ்பு ‘சேலஞ்ச்’ நேர்காணல்
admin - 0
தீவிர அரசியலில் ஈடுபட தடையாக இருப்பதாகச் சொல்லி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு அதன் பிறகும் அமைதியாகவே இருக்கிறார். தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசினோம்.
குஷ்பு இப்போது பாஜக-வில் தான் இருக்கிறாரா?
பத்திரிகை, ஊடகங்களில் என் முகம் தெரிந்தால் தான் நான் பாஜக-வில் இருக்கிறேன் என்பது இல்லை. நான் இப்போது...










