வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் சமையல் பாத்திரங்களுடன் போராடுங்கள்: மம்தா
admin - 0
மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் சமையல் பாத்திரங்களுடன் பெண்கள் போராட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மேற்குவங்கத்தின் கிருஷ்ணாநகரில் நேற்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி.ஜெபி மாத்தர் ஹிஷாம் நேற்று பேசியதாவது: கேரள மாநிலம் கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக அளவில் போலி மருந்துகள் புழக்கம் குறித்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
இது ஒரு சிறிய தவறு அல்ல. இந்த சோதனைகள் கேரள மருந்து கட்டுப்பாட்டு துறையின் முழுமையான தோல்வியை, திறமையின்மையை அம்பலப்படுத்துவதாக உள்ளது. மாநில மருந்து கட்டுப்பாட்டு துறையின் அலட்சியத்தால்...
உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கத்தில் பங்கேற்று உரிமை கோரப்படாத பணத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை, பரஸ்பர நிதி நிறுவனங்களில், பல ஆயிரம் கோடி ரூபாய் பல்வேறு காரணங்களால் பொதுமக்களால் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக ‘உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கம்' கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து லிங்க்டு...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இணையத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், வரும் 23-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 8-ம் தேதி வரையிலும், மற்றும் ஜனவரி 25-ம் தேதி ரதசப்தமி போன்ற நாட்களில்...
வரலாற்றை மதிக்காவிட்டால் சிறந்த எதிர்காலம் இல்லை: வந்தே மாதரம் சர்ச்சை பற்றி சத்குரு கருத்து
admin - 0
தனது வரலாற்றை மதிக்காத எந்தவொரு நாடும் தனக்கென ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறினார்.
வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதம் பற்றி காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறியதாவது: நமக்கு புத்திசாலித்தனம் இருக்கலாம், திறமை இருக்கலாம், வளங்கள் இருக்கலாம், நாகரிக வரலாறு ஏராளமாக...
அயோத்தியில் 6 ஆண்டுகளாகியும் பாபர் மசூதி கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. வடிவமைமைப்பு முடிவாகாதது, நிதி வசூலில் சுணக்கம் ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன.
உத்தரபிரதேசம், அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு நவ. 19, 2019-ல் வெளியானது.
இதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி...
இண்டிகோ விமான சேவை முடங்கியபோது பிற நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியது எப்படி? – ஐகோர்ட்
admin - 0
இண்டிகோ விமான சேவை முடங்கியபோது பிற நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியது எப்படி என டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புதிய பணி நேர விதிகள் (எப்டிடிஎல்) காரணமாக, நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடந்த வாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு தலையிட்டதையடுத்து நிலைமை சீரடைந்து வருகிறது. எனினும், 9-வது நாளான நேற்றும் பல விமானங்கள்...
கரோனா காலத்தில் ஆப் மூலம் ரூ.1,000 கோடி முதலீட்டு மோசடி – 2 சீனர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு
admin - 0
கரோனா பேரிடரின்போது செல்போன் செயலி மூலம் ரூ.1,000 கோடி சுருட்டிய வழக்கில் 2 சீனர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் நேற்று கூறியதாவது: கரோனா பொதுமுடக்கத்தின் போது ”எச்பிஇசட் டோக்கன்ஸ்” என்ற போலியான செல்போன் செயலியைப் பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து ரூ.1,000 கோடி திரட்டப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி மற்றும் அதிக வட்டி தருவதாக கூறி இந்த மோசடி நடைபெற்றது.
வெளிநாட்டைச் சேர்ந்த பெரிய கும்பல் சைபர் கிரைம்...
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு மாதம் ஒருநாள் ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 52 வயது வரையிலான பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அம்மாநில அரசு...
திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் உள்ளனவா என்பது குறித்து கோயில் நிர்வாகத்தினர் பக்தர்களிடையே கருத்துகளை கேட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் நிறை, குறைகளை ஆராய்ந்து சரி செய்ய வேண்டுமென முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாரி சேவகர்கள்...
