பெண்களுக்கு எதிராக கடந்தாண்டில் 76,657 சைபர் குற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய சைபர் குற்றம் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார் கூறியதாவது: பெண்களுக்கு எதிராக கடந்த 2022ல் 62,224, 2023ல் 40,066, 2024ல் 48,335 மற்றும் 2025ல் 76,657 சைபர் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தேசிய சைபர் குற்றப்...
ஆந்திராவில் பெண்களை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.
ஆந்திராவில் ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த 2024 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். தேர்தலுக்கு பின் ஆட்சியை கைப்பற்றிய அவர், அத்திட்டத்தை படிப்படியாக அமல்படுத்தி வருகிறார். இதன்படி மாதந்தோறும் முதியோர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.6...
பெங்களூருவில் உள்ள பாரதி நகரை சேர்ந்த 55 வயதான ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வருமான வரித்துறையில் அதிகாரியாக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த மார்ச் 6-ம் தேதி பாரதிநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியதாவது: கடந்த டிசம்பரில் கிளி ஜோசியர் சேகர் (59) எனக்கு அறிமுகமானார். எனது ஜாதகத்தை ஆராய்ந்த பின்னர், கிளி ஜோசியம் பார்த்தார். எனக்கு பணி இட மாற்றமும், பதவி உயர்வும்...
இமாச்சலில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணியவும் சமூக ஊடகத்தில் அரசியல், மதக் கருத்துகள் தெரிவிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலில் கடந்த 2017ம் ஆண்டு, ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கான ஆடை நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சஞ்சய் குப்தா வெளியிட்டுள்ள விரிவான வழிகாட்டுதலின்படி, அனைத்து அரசு ஊழியர்களும் கண்ணியமான, சுத்தமான மற்றும் தொழில்முறை சார்ந்த...
ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனையின்போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி
admin - 0
அமலாக்கத் துறை சோதனை நடைபெறும் போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேற்கு வங்கத்தில் ஐ-பேக் அலுவலகத்தில் சமீபத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது திடீரென அந்த அலுவலகத்துக்குள் முதல்வர் மம்தா பானர்ஜி நுழைந்தார். அங்கிருந்து ஆவணங்கள், லேப் டாப் போன்றவற்றை எடுத்துக் கொண்டு சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அமலாக்கத்...
கடைகளில் விற்கப்படும் முட்டைகளில் காலாவதி தேதியைக் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் பழைய முட்டைகளை விற்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் முட்டை வர்த்தகத்தின் மீதான தனது பிடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இறுக்கியுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் பழைய முட்டைகளை புதியவை என்று கூறி விற்பது சாத்தியமில்லாத நிலை உருவாகியுள்ளது.
உ.பி அரசின் புதிய...
தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
admin - 0
தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா, சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பேச முயன்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 3ம் தேதி, மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். அப்போது அவர்கள் காகிதங்களை...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) 291 வேட்பாளர்கள் பட்டியலை...
ஒடிசாவில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜகவை சேர்ந்த மன்மோகன் சமல், சுஜித் குமார், திலீப் ரே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பிஜு ஜனதா தளத்தில் சான்ட்ரப்ட் மிஸ்ரா வெற்றி பெற்றார். அந்த கட்சியின் மற்றொரு வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோடா தோல்வி அடைந்தார். மாநிலங்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. காங்கிரஸின் 14 எம்எல்ஏக்களில் 3 பேர் அணி...
ம.பி.யின் போஜ்சாலா கட்டிடத்தில் கோயில் இருந்ததா? – ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய முடிவு
admin - 0
மத்திய பிரதேச மாநிலத்தின் தார் நகரில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா கட்டிடம் உள்ளது. இந்த வளாகத்தில் இருந்த கோயிலை இடித்துவிட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, போஜ்சாலாவை கோயிலாக மாற்ற இந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், உள்ளே இருக்கும் மவுலானா கமாலுதீன் மசூதி அங்குதான் இருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சர்ச்சை தொடர்பாக ம.பி. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள்...










