பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இன்று (மே 29) நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஹரியானா மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது. அதனால் ‘ஆபரேஷன் ஷீல்ட்’ ஒத்திவைக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்தது. இது தொடர்பாக அரசு துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டது....
தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்: முதல்வர் உமர் அப்துல்லா கருத்து
admin - 0
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.
மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக பாரம்பரியத்திலிருந்து விலகி பஹல்காமில் ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்துக்கு முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தலைமை தாங்கினார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பொறுப்பேற்றதிலிருந்து கோடைகால தலைநகர் ஸ்ரீநகர் அல்லது குளிர்கால தலைநகர் ஜம்முவுக்கு வெளியே அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது இதுவே...
போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட பசவராஜுவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஒருவர் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். சிதறுண்டு வரும் நக்சலைட்டுகளின் இயக்கம் குறித்து அவர் வெளிப்படையான தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் நம்பல கேசவ் ராவ் என்கிற பசவராஜு. இவருடன் மொத்தம் 27 மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம், இந்தியாவில் நக்சல் இயக்கத்துக்கு எதிரான போரில்...
ஷோபனா, நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண்: 68 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்
admin - 0
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குருவாயூர் துரை, புதுச்சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டன.
கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு,...
‘‘சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு’’ என அவரது 61-வது நினைவு தினத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி அவர் இறக்கும் வரை 16 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்தார். அவரது 61-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை...
பெங்களூரு புறநகரில் பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டியில் ஈடுபட்ட சீன பெண் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ரேவ் பார்ட்டி நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அதிகாலை 3 மணியளவில் சோதனையிடச் சென்றனர்.
அப்போது 31 பேர் கஞ்சா, போதைப் பொருள், மது வகைகளை அருந்திவிட்டு, நடனமாடி கொண்டிருந்தனர். அதில் 28 வயதான சீனாவை...
ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரை சேர்ந்தவர் பிரவீன் மிட்டல் (42). இவர் தனது பெற்றோர், மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள பாகேஸ்வர் கோயிலுக்கு வந்தார். இக்கோயிலில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரவு பஞ்ச்குலா நகரின்...
இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
admin - 0
இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.5,536 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த பகுதியை மீட்க சர்தார் படேல் திட்டமிட்டார்....
கர்நாடகாவில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 2 பாஜக எம்எல்ஏக்களை கட்சி மேலிடம் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது.
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏ சிவராம் ஹெப்பார் கட்சி மேலிடத்தையும், மாநில தலைவர் விஜயேந்திராவையும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்தார். இதனால் அவர் தனது பழைய கட்சியான காங்கிரஸுக்கே திரும்ப போவதாகவும் தகவல் வெளியானது.
இதேபோல பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் தொகுதியில் எம்எல்ஏ...
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் ஜம்முவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்...










