Google search engine
மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் அவற்றை கால​வரை​யின்றி ஆளுநர்​கள் நிறுத்தி வைக்க முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் கர்​நாட​கா, கேரளா, பஞ்​சாப் மாநில அரசுகள் நேற்று வாதிட்​டன. மசோ​தாக்​களுக்கு 3 மாதங்​களுக்​குள் ஒப்​புதல் அளிக்க ஆளுநர்​களுக்​கும், குடியரசுத் தலை​வருக்​கும் காலக்​கெடு விதித்த விவ​காரத்​தில் குடியரசுத் தலை​வர் எழுப்​பி​யுள்ள கேள்வி​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது. இதில் கர்​நாடக அரசு தரப்​பில்...
நடிகர் அல்லு அர்​ஜுனின் தந்​தை​யான அல்லு அர்​விந்த் ஹைத​ரா​பாத்​தில் கீதா ஆர்ட்​ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்​களில் திரைப்பட தயாரிப்பு நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். இவற்​றின் அலு​வலக கட்​டிடம் ஜூப்ளி ஹில்ஸ் சாலை எண் 45-ல் அமைந்​துள்​ளது. இந்த கட்​டிடத்​துக்கு 4 அடுக்​கு​கள் மட்​டுமே கட்ட ஹைத​ரா​பாத் மாநக​ராட்சி அனு​மதி அளித்​துள்​ளது. ஆனால் கடந்த 2023-ல் அனுமதி பெறாமலேயே 5-வது மாடி கட்​டப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் அல்லு அர்​விந்​துக்கு ஹைத​ரா​பாத்...
 ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கலாபன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நிலம் உள்வாங்கியதில் சுமார் 50 கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், “சேதமடைந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை வீடுகள் ஆகும். 3 பள்ளிக் கட்டிடங்கள், ஒரு மசூதி, ஒரு கல்லறை மற்றும் அந்த கிராமத்துக்கு செல்லும் சாலையும் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நிலம் உள்வாங்கி வருவதால் கிராம மக்கள்...
இ​மாச்​சலப் பிரதேசம் மற்​றும் பஞ்​சா​பில் வெள்ள பாதிப்பு பகு​தி​களை பிரதமர் மோடி நேற்று பார்​வை​யிட்​டு, மீட்பு பணி மற்​றும் நிவாரண நடவடிக்​கைகள் குறித்து உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட் ஆகிய மாநிலங்​களில் கன மழை காரண​மாக வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. பஞ்​சாப் மாநிலத்​தில் பெய்த கன மழை காரண​மாக மாநிலத்​தின் பல பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​தது. டெல்​லி​யில் நேற்று காலை குடியரசு துணைத்...
 கேரள மாநிலத்​தில் உள்ள பார்த்​த​சா​ரதி கோயி​லின் பிர​காரத்​தில் ஆஎஸ்​எஸ் கொடி​யுடன் ஆபரே ஷன் சிந்​தூர் பெயரில் மலர் கம்​பளம் உரு​வாக்​கிய அக்​கட்​சி​ தொண்​டர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், “இந்த பகு​தி​யில் கம்​யூனிஸ்ட் (சிபிஐஎம்) கட்​சி​யினருக்​கும், பாஜக​வினருக்​கும் இடையே ஏற்​கெனவே பல்​வேறு மோதல்​கள் ஏற்​பட்​டுள்​ளன. எனவே, அவர்​களிடம் இந்த பதற்​றம் நிறைந்த பகு​தி​யில் கொடியோ அல்​லது வேறு ஏதும் அடை​யாளத்தை பிர​திபலிக்​கும் வகை​யில் மலர்...
ஒடிசா மாநிலத்​தில் உள்ள மதரஸா ஒன்​றில் 16 மாணவர்​கள் படிக்​கின்​றனர். இங்கு பயிலும் சிறு​வனை, அங்கு படிக்​கும் மற்ற மாணவர்​கள் 5 பேர் கடந்த 6 மாத​மாக தகாத உறவுக்கு உட்​படுத்​தி​யுள்​ளனர். இது குறித்து தனது பெற்​றோரிடம் புகார் தெரிவிக்​கப்​போவ​தாக சிறு​வன் மிரட்​டி​யுள்​ளான். இதனால் அந்த சிறு​வனை கொலை செய்ய மதரஸா மாண வர்​கள் 5 பேர் முயற்​சித்​தனர். சில நாட்​களுக்கு முன் அந்த சிறு​வனை தண்​ணீர் தொட்​டி​யில் தள்ளி...
உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது. உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன் பிரிவு 108 (2)-ன் கீழ், நில உரிமையாளர் இறந்த பிறகு, அந்த நிலம் அவரது மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத மகளின் பெயருக்கு மட்டுமே மாற் றப்படுகிறது. இதில் திருமணமான மகள்களுக்கு உரிமை இல்லை. இந்த விதியை...
உத்தர பிரதேசத்​தின் மிர்​சாபூரைச் சேர்ந்த ராமச்​சந்​திர ராம், ஜார்க்​கண்ட் மாநிலம் பலமு மாவட்​டம் லொட்வா கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிங்கி தேவி.சமீபத்​தில் பெய்த கனமழை​யால் இவர்​கள் தங்​கி​யிருந்த குடிசை சேதமடைந்​துள்​ளது. இந்த தம்​ப​திக்கு 4 குழந்​தைகள். ஒரு மாதம் முன்பு 5-வ​தாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதிலிருந்து தேவிக்கு உடல்​நிலை சரி​யில்​லாமல் போய் உள்​ளது. சிகிச்​சைக்கு பணம் இல்​லாத காரணத்​தால், தங்​களு​டைய ஒருமாத...
பாஜக எம்​பி.க்​களின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இந்த கூட்​டத்​தில் பிரதமர் மோடி கடைசி வரிசை​யில் அமர்ந்​திருந்து நிகழ்ச்​சிகளை கவனித்​தார். இதுதொடர்​பான புகைப்​படம் தற்​போது சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி உள்​ளது. இந்த கூட்​டத்​தில் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் எவ்​வாறு வாக்​களிப்​பது என்​ப​தற்​கான பயிற்​சிகளும் வழங்​கப்பட உள்​ளது. நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் அனை​வரும் பங்​கேற்​கும் பாஜக​வின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இதில், ஜிஎஸ்​டி​யில்...
 உத்தர பிரதேச மாநிலத்​தில் இருந்து பெரிய கன்​டெய்​னர் லாரி​களில் பசுக்​கள் ஜார்க்​கண்ட் மாநிலம் கர்வா மாவட்​டம் நவடா கிராமத்​துக்கு கடத்திச் செல்வதாக விஸ்வ இந்து பரிஷத் (விஎச்​பி) மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் கடந்த 4-ம் தேதி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். இதனிடையே, பசுக்களை நவடா கிராமத்​தில் இருந்து வேறு மாவட்​டங்​களுக்கு அனுப்பி வைத்​துள்​ளனர். அங்கு விரைந்து சென்ற விஎச்பி மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் பசுக்​களை மடக்கி...