மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது. எனினும் மாநிலத்தில் மறுநாளே வன்முறை வெடித்தது. குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும்...
மாணவர்கள் தங்கள் ஆற்றலை வளர்க்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை
admin - 0
ஏஐ போன்ற நவீன தொழில் நுட்பங்களை கண்டு அஞ்சாமல் மாணவர்கள் அவற்றை தங்களின் அறிவாற்றலை பெருக்குவதற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
குஜராத்தின் தேவமொக்ரா, தமிழகத்தின் கோயம்புத்தூர், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் அசாமின் குவாஹாட்டி உள்ளிட்ட நகரங்களில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: தலைமைப் பண்பு என்பது தேர்தலில் போட்டியிடுவதோ அல்லது அரசியல் கட்சி தொடங்குவதோ அல்ல;...
தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழி மக்களவையில் எழுப்பிய ஒரு கேள்விக்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்துள்ளார்.
அதில், “2021- 2026ம் ஆண்டு காலகட்டத்தில் தொல்லியல் அகழாய்வுக்காக மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்காக தமிழ்நாடு தொல்லியல் துறை மொத்தம் 45 பரிந்துரைகளை அனுப்பியது. 2021ல் 12, 2022ல் 8, 2023ல் 3, 2024ல் 10, 2025ல் 12 என 45 பரிந்துரைகள் வந்தன. இதில் 2025ல் வந்த 12...
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் பாதித்தோருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, அன்ஜாரியா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரானார். அவர் கூறும்போது, “டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி வரைவு கொள்கையை தயாரித்து உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு...
கர்நாடக மாநிலத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பைலட் உட்பட இரண்டு பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
கர்நாடகாவின் கலபுர்கி பகுதியில் இருந்து தனியார் பயிற்சி விமானம் ஒன்று பெலகாவி நோக்கி நேற்று புறப்பட்டது. நடுவானில் அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயிற்சி விமானத்தை விஜயப்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயலில் தரை இறக்க பைலட் முயன்றார்.
அந்த விமானம் தரையில் மோதி...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) மலேசியா, சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் இணைந்து பிரிட்டிஷ் படைக்கு எதிராக வீர, தீரத்துடன் போரிட்டனர். அவர்களில் பலர் உயிரோடு உள்ளனர்.
தற்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய நேதாஜி நல அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளையில் ஐஎன்ஏ படை வீரர்கள், உயிரிழந்த வீரர்களின் வாரிசுகள் உறுப்பினர்களாக உள்ளனர். கோலாலம்பூரில் நேற்று மலேசிய நேதாஜி நல அறக்கட்டளை நிர்வாகிகளை...
ஐஎஸ்ஐ தொடர்பு குறித்து காங். எம்.பி. கவுரவ் கோகோயிடம் விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
admin - 0
”காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், அவரது மனைவி எலிசபெத்திடம் பாகிஸ்தான் தொடர்பு குறித்து மத்திய ஏஜென்சி விசாரிக்க வேண்டும்” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தி உள்ளார்.
அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகோய். இவரது மனைவி பிரிட்டனைச் சேர்ந்த எலிசபெத் கோல்பர்ன். இவர்கள் இருவருக்கும் பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாகிஸ்தானின் திட்டக் குழு ஆலோசகர் தவ்கீர் ஷேக்கிடம், கவுரவ் மனைவி எலிசபெத் பணியாற்றி...
ஹரியானா மாநிலம் பரீதாபாத் அருகில் சூரஜ்குந்த் மேளா சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறுகிறது.
இங்கு நேற்று முன்தினம் ராட்சத ராட்டினத்தில் 15 பேர் அமர்ந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை இனி இந்தியா உளவு பார்க்க முடியும் என்ற நிலையை அடைந்துள்ளது. விண்வெளியில் 50-க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) நிர்வகித்து வருகிறது. இந்த செயற்கைக் கோள்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ஒரு செயற்கைக் கோளில் இருந்து மற்றொரு பொருளைப் புகைப்படம்...
மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான வாகன அழைப்புச் சேவையான ‘பாரத் டாக்ஸி’-யை நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “பாரத் டாக்ஸி சேவை முதற்கட்டமாக டெல்லி மற்றும் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். குறிப்பாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் காமாக்யா...
