பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி கூறுகையில், “என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டோம். என்றாலும் என்டிஏ கூட்டணியை...
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 28-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இதனால்...
கேரளாவின் வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று இம்மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் ஒரு பால் பண்ணையை பார்வையிட்டார்.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் அழகான குடும்பம் நடத்தும் பால் பண்ணைக்கு சென்று பால் பண்ணையாளர்களை சந்தித்தேன். (ஆலியா பட் என்ற பசுவையும் சந்தித்தேன்!! திருமதி ஆலியா பட் மன்னிக்க வேண்டும். என்றாலும் அது ஒரு அழகான பசு)" என்று குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா...
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பொதுநலனுக்காக பயன்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
admin - 0
குளோபல் பின்டெக் விழா மும்பையில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உலகளாவிய நிதி தொழில்நுட்ப தலைநகராக இந்தியா சிறந்து விளங்குகிறது. நிதி தொழில்நுட்பத்தில் புதுமை, அளவு மற்றும் உள்ளடக்கத்தில் புதிய அளவுகோல்களை இந்தியா நிர்ணயித்துள்ளது.
தொழில்நுட்பம் என்பது பொது நலனுக்கானதாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் அதனை மற்ற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்....
இமாச்சல பிரதேச நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு: 20 பயணிகள் மண்ணில் புதைந்தனர்
admin - 0
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் மண்ணில் புதைந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கடந்த சில மாதங்களில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் கனமழை காரணமாக நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த...
வெள்ள பாதிப்பை பார்வையிட்டபோது தாக்குதல்: காயமடைந்த பாஜக எம்.பி.யிடம் நலம் விசாரித்தார் மம்தா
admin - 0
மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நக்ரகட்டா பகுதியை பாஜகவை சேர்ந்த மால்டா உத்தர் எம்.பி. கஜேன் முர்மு, சிலிகுரி எம்எல்ஏ. சங்கர் கோஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பார்வையிடச் சென்றனர்.
இவர்கள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதில் முர்மு, கோஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்....
பிரதமர் அலுவலக அதிகாரி என கூறி ஏழுமலையானை தரிசித்தவர் யார்? – டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை
admin - 0
திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதி வழங்குமாறு, கடந்த மே 1-ல் டெல்லி பிரதமர் அலுவலகத்தின் பெயரில் ஒரு கடிதம் திருமலைக்கு வந்தது.
அனைவருக்கும் மே 10-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு கோயில் பிரசாதங்கள்...
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.24,634 கோடியில் 4 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி
admin - 0
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்பில் 4 மல்டி-டிராக்கிங் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை: மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள 18 மாவட்டங்களை உள்ளடக்கி 4 ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்திய ரயில்வேயின் தற்போதைய நெட்வொர்க் கூடுதலாக 894 கி.மீ. அதிகரிக்கும்.
இந்த திட்டங்கள் மகாராஷ்டிராவில் (வர்தா மற்றும் பூசாவல்...
கர்நாடக அரசின் சமூக நலத்துறை நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கர்நாடகாவில் பட்டியல் வகுப்பில் 101 பிரிவினர் உள்ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்தவர், புத்த மதத்துக்கு மாறியிருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக எஸ்சி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
கர்நாடக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்ட விதிகள் இதனை ஏற்கெனவே உறுதி செய்திருக்கிறது.
கடந்த 1990-ல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையிலும், கர்நாடக...
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளுக்கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்டது. இந்த சூழலில் துவார பாலகர் சிலைகளின் பீடங்களை காணவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
தங்க முலாம் பூசப்பட்ட பீடத்தை தேடி கண்டுபிடிக்க ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு ஊழல்...










