“என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள் என்னை கொல்ல வேண்டியிருக்கும்” என்று பாஜகவுக்கு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மீது தாக்குதல்கள் நிகழ்ந்தன. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சுமார் 60 பேர்...
திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட உனகோடி மாவட்டத்தில் மட்டும் 6,068 பேர் 35 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தலாய் மற்றும் கோவாய் பகுதிகளில் மேலும் 4,909 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில்...
இந்தியாவின் பள்ளிக் கல்விக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் தேசியத் தரவுத்தளம் யுடிஐஎஸ்இ+ (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்) ஆகும். இது, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
இதன் அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2025-26-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 4,791 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதில் ம.பி.யில் மட்டும் 2,426 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 2024-25-ல் 14,71,473...
பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீப் குமார், பெங்களூரு 48-வது கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில், “நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார். இது சட்டவிரோதமானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் 3 முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் நேரில்...
ஆல்கஹால் கலப்புள்ள இருமல் சிரப் உள்ளிட்ட மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
புதிய விதிகளின்படி 12%-க்கும் அதிகமான ஆல்கஹால் கலந்து, 30 மிலி-க்கும் அதிக அளவுள்ள பாட்டில்களில் விற்கப்படும் மருந்துகள் அனைத்தும் ‘அட்டவணை எச்-1’ பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, இவற்றை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் நேரடியாக மருந்தகங்களில் வாங்க முடியாது.
அதிக ஆல்கஹால் கலப்புள்ள சில...
குஜராத் மாநில அரசு, நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முதல் பிரத்யேக ‘விக்சித் குஜராத் தரவு மையக் கொள்கை 2026- 29’ என்ற திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியது.
இது குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா கூறியதாவது: பிரத்யேக தரவு மையக் கொள்கை திட்டத்தின் மூலம் முதல் கட்டத்திலேயே ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலகளாவிய தொழில்...
பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சாதனையாக, ஆஸ்திரேலியாவிடம் இருந்த மூன்று தொன்மையான இந்திய சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
மீட்கப்பட உள்ள அந்த சிலைகள் பின்வருமாறு:
* திரிசூல மங்கள காளி (பத்ரகாளி): திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமம் கைலாசநாதர் கோயிலைச் சேர்ந்த 46 செ.மீ. உயரம், 29 செ.மீ. அகலம், 55 செ.மீ. விட்டம் உள்ள சிலை.
* நந்தி:...
ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்மாநில வக்பு வாரியத்தை மறு சீரமைத்து, அதில் 2 இந்து உறுப்பினர்களை நியமித்தார்.
வக்பு (திருத்த) சட்டம், 2025-ன் கீழ் அமைக்கப்பட்ட இந்தப் புதிய வாரியம், இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நாட்டின் முதலாவது மாநில அளவிலான வக்பு வாரியம் ஆகும்.
இது குறித்து உத்தரபிரதேச சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறுகையில், ”வக்பு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தான்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சேப்பலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் அண்மையில் வங்கக்கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி கரை திரும்பவில்லை.
இதையடுத்து குடும்பத்தினர் அளித்த தகவலின்படி அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இதில் கடலோர ரோந்துப் படையினரும் ஹெலிகாப்டர் உதவியுடன் 72 மணி நேரமாக தொடர்ந்து தேடினர். எனினும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அந்த 7 மீனவர்களில் காரி சின்னா மட்டும் உயிர் தப்பி...
‘ராமர் கோயில் காணிக்கை திருட்டை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழு முடிவுகள் கசிந்து விட்டன’
admin - 0
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டை விசாரிக்கும் எஸ்ஐடியின் முடிவுகள் கசிந்து விட்டதாக அயோத்தி சமாஜ்வாதி எம்.பி. அவதேஷ் பிரசாத் புகார் கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உ.பி.யின் ஆளும் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. தீவிரமான கேள்விகளை எழுப்பி வருகின்றன. அயோத்தி தொகுதி சமாஜ்வாதி எம்.பி.யான அவதேஷ் பிரசாத் எஸ்ஐடி மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
இது...










