Google search engine
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்​க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் வெற்றி பெற்​றது. ஆனால், நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட மம்​தா, பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி​யிடம் தோல்​வியடைந்​தார். இதையடுத்து பவானிப்​பூர் தொகு​திக்கு நடை​பெற்ற இடைத்​தேர்​தலில் மம்தா வெற்றி பெற்று முதல்​வ​ராக இருந்து வரு​கிறார். இந்​நிலை​யில் இந்​தத் தேர்​தலில் மீண்​டும் அவர் பவானிப்​பூர் தொகு​தி​யில் களமிறங்​கு​கிறார். இதைத் தொடர்ந்து கடந்த தேர்​தலைப் போல​வே,...
கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா தானே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடரப் போவதாக தெரிவித்தார். கர்நாடக முதல்வராக‌ சித்தராமையா பொறுப்பேற்று வருகிற மே மாதத்துடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தன‌க்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள்...
சிறை​யில் 50 நாட்​கள், ஓட்​டலில் 25 நாட்​கள், பேருந்​தில் 19 மணி நேர பயணம் என இந்​தி​யர் ஒரு​வர் பல சிரமங்​களை எதிர்​கொண்டு தாயகம் திரும்​பி​யுள்​ளார். கடந்த ஆண்டு டிசம்​பர் 8ம் தேதி சட்​ட​விரோத​மாக டீசல் ஏற்​றிச் செல்​வ​தாக கூறி ‘எம்​.டி. வேலியன்ட் ரோர்' என்ற எண்​ணெய் கப்பலை சர்​வ​தேச கடல் எல்​லை​யில் ஈரான் ராணுவம் சிறை பிடித்​தது. கப்​பலில் 16 இந்​தி​யர்​கள் உள்​ளிட்ட 18 ஊழியர்​கள் இருந்​தனர். இவர்​களில்...
கேரளத்​தில் முதல்​முறை வாக்​காளர்​களை கவர அல்வா வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் புது​மை​யான முயற்​சி​யால் முதல்​முறை வாக்​காளர்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். கேரளத்​தில் வரும் 9-ம் தேதி சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் முதல்​முறை​யாக வாக்​களிக்க உள்ள இளம் வாக்​காளர்​களை கவர அவர்​களுக்கு அல்வா வழங்​கும் திட்​டத்தை தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. கேரள தலை​மைத் தேர்​தல் அதி​காரி ரத்​தன் யு. கேல்​கர் இதற்​கான அறி​விப்பை சில தினங்​களுக்கு...
கேரளத்தில் மொத்​தம் 140 சட்​டப் பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. மெஜாரிட்​டி​யுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்​சிக்கு 71 தொகு​தி​கள் தேவை என்ற நிலை உள்​ளது. இந்​தத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மை​யிலான இடது​சாரி ஜனநாயக முன்​னணி க்கும் (எல்​டிஎஃப்) காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்கும் (​யுடிஎஃப்) இடையே பலத்த போட்டி உள்​ளது. அதே​நேரம் பாஜக​வும் சில தொகு​தி​களில் இரு முன்​னணி வேட்​பாளர்​களுக்​கும் பலத்த சவாலை அளித்து வரு​கிறது. இந்​நிலை​யில் மனோரமா...
பிஹாரில் மிக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர் எனற பெருமைக்குரியவர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தளம் தலைவரான அவர், மத்திய அரசியலுக்கு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 16ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இந்நிலையில் அவர் தனது சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை நேற்று ராஜினாமா செய்தார். எனினும், முதல்வர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில் மாநிலங்...
திமுக எம்​.பி.வில்​சன் மாநிலங்​களவை​யில் நேற்று பூஜ்ஜிய நேரத்​தில் பேசி​ய​தாவது: யுபிஎஸ்​சி-​யின் சிவில் சர்​வீஸ் முதல்​நிலை தேர்வு இந்தி மற்​றும் ஆங்​கிலத்​தில் மட்​டுமே நடத்தப்படு​கிறது. இதனால் தென்​னிந்​தியா மற்​றும் வடகிழக்கு மாநிலங்​களைச் சேர்ந்த திறமை​யான தேர்​வர்​கள் முதல் சுற்​றிலேயே வெளியேற்றப்​படு​கிறார்​கள். இதனால் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்​ப​தில்​லை. எனவே தமிழ் உட்பட அனைத்து 22 மொழிகளி​லும் சிவில் சர்​வீஸ் முதல்​நிலைத் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். யுபிஎஸ்சி தேர்​வுக்​கான மதிப்​பெண் வழங்​கும்...
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா என்கிற நாராயண ராவ். இவர் 1990-களில் நக்சலைட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசிய அளவில் அந்த இயக்கத்தில் முக்கிய நிர்வாகியாகவும், மூளையாகவும் செயல்பட்டு வந்தார். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தால் கோடிக்கணக்கில் பரிசு வழங்கப்படும் என ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், சோமண்ணா உள்ளிட்ட பலர் ஆந்திர டிஜிபி முன்னிலையில்...
உத்தர பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்த விவசாயி விமான நிலையத்துக்கு நிலம் வழங்கி ரூ.15 கோடியை பெற்றார். இதன் மூலம் அவர் சொந்தமாக ஹெலிகாப்டரை வாங்கி உள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவின் ஜேவார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். சுமார் 11,750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம் ஆகும்....
மாநிலங்களவையின் ஜீரோ நேரத்தில் பாஜக எம்.பி கே.லட்சுமன் நேற்று பேசியதாவது: தமிழகம், கேரளா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மதத்தின் பெயரால் ஒபிசி இட ஒதுக்கீடு தவறாக பயன்படுத்தப்படுகிறது. இடஒதுக்கீட்டு கொள்கை, மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை. ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்குவது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக உயர் நீதிமன்றங்கள்...