மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் மற்றும் தலைமைக் கொறடாவாக கொடிக் குன்னில் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கடிதம் மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர், தலைமை கொறடா மற்றும் மக்களவை காங்கிரஸ் கட்சியின் 2 கொறடாக்கள் நியமனம் தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித்தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார் என அக்கட்சியின்...
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அடக்குமுறைகள்: நேரு காலம் முதல் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டது பாஜக
admin - 0
நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ஒவ்வொரு ஆண்டும் அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த அறிவிப்பை காங்கிரஸ் மட்டுமின்றி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுதன்ஷு திரிவேதி டெல்லியில் கூறியதாவது:
அவசர நிலை காலத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள்...
நவீன கருத்தடை சாதனங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உள்ளன. இவை பரவலாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் இவை பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது. இந்த உரிமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
நவீன கருத்தடை சாதனங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில்...
தீவிரவாதிகளுக்கு நிதி: யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை கோரும் என்ஐஏ வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்
admin - 0
யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை கோரும் என்ஐஏ மேல்முறையீட்டு வழக்கில் இருந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் சர்மா நேற்று விலகினார்.
காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்ததால் இவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உட்பட பல பிரிவுகளில் தேசியபுலனாய்வு முகமை கைது செய்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட யாசின் மாலிக்குக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயுள் தண்டனை...
“ஆதார் அட்டையுடன் வந்தால் மட்டுமே சந்திப்பு”- தொகுதி மக்களுக்கு பாஜக எம்.பி கங்கனா நிபந்தனை
admin - 0
தொகுதி மக்கள் தன்னைக் காண விரும்பினால் ஆதார் அட்டையுடன் வருமாறு இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள கங்கனா ரனாவத், "இமாச்சல பிரதேசம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய மாநிலம். எனவே, எனது தொகுதி மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடாது என்பதற்காகவே ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என கூறுகிறேன். மேலும், என்னை சந்திப்பதற்கான காரணத்தையும், தொகுதிகளின் பிரச்சினைகளையும் காகிதத்தில் எழுதி வரும்படி...
வால்மீகி கார்ப்பரேஷன் ஊழல் வழக்கு தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வுமான பி.நாகேந்திரனை தடுப்புக் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் போது செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரன், "நான் எனது வீட்டில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறேன். இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.
முன்னதாக கடந்த மே 21-ம் தேதி பெங்களூரு மாநகராட்சியின் கணக்கு...
பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதே மோசடி தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கால் கேஜ்ரிவால் தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில், இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சித் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி பொதுசெயலாளர் சந்தீப் பதக் கூறுகையில், “இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, ஜாமீன் வழங்கியிருப்பதன்...
சிபிஐ பெயரில் லக்னோவில் வித்தியாசமான சம்பவம்: வீடியோ கால் பேசி கவிஞரை பாட சொல்லி மிரட்டிய கும்பல்
admin - 0
உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள கோம்தி நகர் காவல் நிலையத்தில் கவிஞர் நரேஷ் சக்சேனா புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூலை 7ஆம் தேதிமாலை 3 மணியளவில் கவியரங்கம் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற நான் புறப்பட்ட சமயத்தில்எனது அலைபேசியில் வீடியோ கால் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், ஆதார் அட்டையைநான் தொலைத்துவிட்டேனா என்றுகேள்வி கேட்டார்.
எனது வங்கிக் கணக்கில் மும்பையில் யாரோ ஒருவர் பல கோடி...
உத்தரப் பிரதேச அரசின் நிர்வாகத் தோல்வியே ஹாத்ரஸ் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் சைஃபை நகரில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "கடந்த 2-ம் தேதி ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 112 பெண்கள் உள்பட 121...
மகாராஷ்டிராவில் சொந்த வாகனத்தில் சிவப்பு சைரன் விளக்கு பயன்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை அவர் பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது. பூஜா தனது சொந்த காரில் மகாராஷ்டிர அரசு என்ற பலகையும் சிவப்பு-நீல சைரன்...










