மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 144 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 4 இடங்களில்...
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அசாம் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96% வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணி...
“எங்கள் கண் முன்னே மரணத்தை கண்டோம்” – ம.பி. ஜபல்பூர் படகு விபத்தில் உயிர் தப்பியவர்கள் வாக்குமூலம்
admin - 0
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு விபத்துக்குள்ளானதில், பல குடும்பங்கள் தங்களின் உறவினர்களைப் பறிகொடுத்துப் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
மகிழ்ச்சியாக தொடங்கிய அந்த சுற்றுலாப் பயணம், மரணப் போராட்டமாக மாறிய துயரமான தருணங்களை விபத்தில் உயிர் தப்பியவர்கள் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11-ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியின்போது மேலும் இரண்டு...
ரீல்ஸ் எடுக்க தண்ணீர் தொட்டி மீது ஏறிய உ.பி. இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு: விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் 2 பேர் மீட்பு
admin - 0
உத்தர பிரதேசத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக மேல்நிலை தண்ணீர் தொட்டி மீது ஏறி, இறங்க முடியாமல் தவித்த இளைஞர்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய மேல்நிலை தண்ணீர் தொட்டியின் மீது நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் 5 இளைஞர்கள் ஏறி உள்ளனர். சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்' எடுக்க அந்தத் தண்ணீர் தொட்டியின் மீது ஏறியுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியின்...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 90+ தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் இக்கூட்டணி கேரளாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி, ஐக்கிய ஜனநாயக முன்னணி 92 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகித்து...
பெங்களூருவில் நேற்று மாலை பெய்த ஆலங்கட்டி மழையால் பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூருவில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் ஐடி நிறுவனங்களிலும் சாலைகளில் பனிமழை பெய்தது போன்று காட்சியளித்தது. சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ண ராஜபுரம்,...
ஒடிசா மாநிலம் கேந்துஜார் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா. இவரது சகோதரி கக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். மல்லிபாசி பகுதியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கிக் கிளையில் கக்ரா கணக்கு வைத்திருந்தார். அதில் இருந்த ரூ.19,400-ஐ எடுப்பதற்காக ஜீத்து முண்டா வங்கிக்குச் சென்றுள்ளார்.
கல்வியறிவு இல்லாத பழங்குடியினரான ஜீத்து முண்டாவிடம், அவரது சகோதரியின் இறப்புச் சான்றிதழ் அல்லது வாரிசுச் சான்றிதழ் இல்லை. இதனால், கணக்கு...
90 வயது மூதாட்டியின் அவதூறு வழக்கில் 20 ஆண்டுக்கு பிறகு விசாரணையா? – மறுநாளில் உத்தரவை மாற்றிய ஐகோர்ட்
admin - 0
மூதாட்டி தாக்கல் செய்த அவதூறு வழக்கை 20 ஆண்டுகள் கழித்து விசாரிக்கப்படும் என்ற உத்தரவை மறுநாளில் மாற்றி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தாரிணிபென் (90), த்வனி தேசாய் (57) ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு கில்கில்ராஜ் பன்சாலி மற்றும் சிலருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். 2015ம் ஆண்டு ஷியாம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது நடந்ததாகக்...
டீப்ஃபேக் வீடியோ மூலம் வங்கியில் கடன் பெற்று நூதன மோசடி செய்த நான்கு பேரை அகமதாபாத் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி கவனம் பெற்று என்பது குறித்து பார்ப்போம்.
வழக்கமாக சைபர் மோசடியாளர்கள் ஓடிபி எண்ணை கொண்டு மோசடி செய்வர். அதனால் ஓடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என காவல் துறையினர், வங்கிகள் சொல்வதுண்டு. இந்நிலையில், அந்த ஓடிபி-யை பெற டீப்ஃபேக் வீடியோவை குஜராத்தில்...
தெற்கு மும்பையைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரின் (35), மகள்கள் ஆயிஷா (16) மற்றும் ஜைனப் (13) ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் நடந்த உறவினர்கள் சந்திப்புக்குப் பிறகு தர்பூசணி பழம் சாப்பிட்டனர். அதன் பிறகு அனைவருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களிலேயே 4 பேரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வெளியான பூர்வாங்க...










