இந்திய செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சில விஷயங்கள் யதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தித்தாள் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய செர்ஜியோ கோர், “நான் வீட்டுக்குத் திரும்பியதும் இந்திய செய்தி சேனல்களின் நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். நேரம் செல்லச் செல்ல நிகழ்ச்சிகள் மிகவும் விசித்திரமாகிவிடுகின்றன. மாலை 6 மணிக்கு ஒரு நிகழ்ச்சியில் எட்டு பேர் விவாதிப்பார்கள். இரவு 10 மணிக்கு,...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு பொருளா​தார உறவு​களை வலுப்​படுத்​தும் நோக்​கில் கனடா மற்​றும் அமெரிக்க நாடு​களுக்கு 8 நாட்​கள் பயணம் மேற்​கொள்​கிறார். தனது பயணத்​தின் முதல் கட்​ட​மாக கனடா​வின் டொராண்டோ நகருக்​கு இன்று செல்​லும் அவர், அந்நாட்​டின் நிதி மற்​றும் வருவாய் துறை அமைச்​சர் பிரான்​சு​வா-பிலிப் சாம்​பேனுடன் இணைந்து முதலா​வது ‘இந்​தியா - கனடா நிதிப் பேச்​சு​வார்த்​தை’ நிகழ்​வில் பங்​கேற்​கிறார். இதில் பொருளா​தா​ரம், நிதித்​துறை ஒத்துழைப்​பு, முதலீடு​கள், ஆற்​றல்,...
இந்​திய, ரஷ்ய வர்த்​தக, பொருளா​தார அறி​வியல், தொழில்​நுட்ப, கலாச்​சார கூட்​டமைப்​பின் 27-வது மாநாடு மாஸ்​கோ​வில் கடந்த 23, 24-ம் தேதி​களில் நடை​பெற்​றது. இதில் இந்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்சங்கர் பங்​கேற்​றார். இந்த மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, அவர் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது அமைச்​சர் ஜெய்​சங்​கர் கூறும்​போது, “இந்​தி​யா, ரஷ்யா இடையி​லான பொருளா​தார ஒத்​துழைப்பு அதி​கரித்து வரு​கிறது. வர்த்​தகம், எரிசக்​தி, உரங்​கள், அணு...
கர்நாடகா​வில் யாசகம் பெற்று வாழ்ந்த மூதாட்டி இறந்​ததை தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்த போது 30 மூட்டைகளில் ரூ.30 லட்​சம் ரொக்​க‌ப் பணம் சேமித்து வைத்திருந்தது ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யது. கர்​நாடக மாநிலம் மண்டியா மாவட்​டத்​தில் உள்ள குதாலு பகு​தியை சேர்ந்​தவர் ஹூர் உன்​னிசா (68). இவர் அங்​குள்ள மசூ​தி​யின் வாயி​லில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்​தார். இந்​நிலை​யில் நேற்று முன் தினம் அவர் உடல் நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது வீட்டை...
உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களின் எழுச்சி ஆகியவை இந்தியாவை உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு மையமாக மாற்றியுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவில் தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள காணொலியில், "இது மாற்றத்தின் ஒரு புதிய தொடக்கமாகும். இந்த புதிய சுழற்சியில், உலக அரங்கில் இந்தியா தனது...
இந்தியா - சீனா எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக நாளை நடைபெறவுள்ள சிறப்​புப் பிர​தி​நி​தி​கள் பேச்சுவார்த்தையில் பங்​கேற்​ப​தற்​காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பெய்ஜிங் செல்​கிறார். இந்​தி​யா–சீனா இடையி​லான 3,488 கி.மீ. நீள எல்​லையை உள்ளடக்கிய சிக்​கலான எல்​லைப் பிரச்​சினைக்கு தீர்வு காண்பதற்​காக, இருதரப்பு சிறப்​புப் பிர​தி​நி​தி​கள் நிலை​யில் பேச்சு​வார்த்தை நடத்​து​வது என 2003-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்​டது. இதன்​படி அவ்​வப்​போது பேச்​சு​வார்த்தை நடைபெற்று வரு​கிறது. அந்த வகை​யில், இந்​தியா...
கேரளா​வின் குருவாயூர் தேவசம் வாரி​யத் தலை​வர் ஏ.வி. கோபி​நாத் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் இன்று (ஞாயிறு) 437 திருமணங்கள் நடை​பெற்​றன. கோயில் வரலாற்​றில் இவ்​வளவு அதி​க​மான திரு​மணங்​கள் ஒரே நாளில் நடை​பெற்​றது இதுவே முதல்​முறை. திரு​மணங்​கள் நடை​பெறும் இந்த மங்​களகர​மான நிகழ்​வுக்கு பொது​மக்​கள் மிகுந்த ஆதரவு அளித்​தனர். திரு​மணங்​களுக்​குத் தேவை​யான அனைத்து வசதி​களை​யும் தேவசம் நிர்​வாகம் ஏற்​பாடு செய்​திருந்​தது. கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த 100-க்​கும் மேற்​பட்ட...
மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இன்று (ஆக.24 - திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் அந்த மருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின் படி அந்த வார்டில் இருந்த வென்டிலேட்டர் வெடித்தது இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
நாடு முழு​வதும் போதைப்​பொருள் கடத்​தலை ஒழிக்கும் நோக்​கில், வரும் செப்​டம்​பர் மாதம் முதல் ஓராண்​டுக்கு சோதனை​களை நடத்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்​ட​மிட்​டுள்​ளது. போதைப்​பொருள் கடத்​தல் கும்​பல்​களை முற்​றி​லு​மாக ஒழிக்​கும் நோக்​கில், செப்​டம்​பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்​திற்கு நாடு தழு​விய 24 சிறப்​புப் பதினைந்து நாள் அதிரடி நடவடிக்​கைகளுக்​கான கால அட்​ட​வணையை மத்​திய போதைப்​பொருள் தடுப்​புப் பிரிவு வெளி​யிட்​டுள்​ளது. ஆகஸ்ட் 16 முதல் பள்​ளி, கல்​லூரி மாணவர்​களிடையே விழிப்​புணர்வு...
கற்கள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு பரிசீலிக்கும் என்று முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாக கேரள முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது....