டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் வேளையில் ஹரியானாவில் பயிர் கழிவுகளை எரித்த 16 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில்காற்று மாசுபாடு தீவிரம் அடைகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் சுகாதார பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. வாகனப் புகை, தொழிற்சாலை உமிழ்வு மற்றும் கட்டுமானப் பணிகளால் பரவும் தூசுக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதும் டெல்லி காற்று மாசுபாட்டுக்கு...
வங்கக் கடலில் உருவான டானா புயல் நாளை கரையை கடக்கிறது: ஒடிசாவில் 800 நிவாரண முகாம்கள் அமைப்பு
admin - 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் சின்னத்தையொட்டி, ஒடிசாவில் முன்னெச்சரிக்கையாக 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு டானா புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுநாளை (அக். 24-ம் தேதி) ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் 800 புயல் நிவாரண...
ஹேமந்த் சோரன் – தேஜஸ்வி பேச்சுவார்த்தை: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
admin - 0
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியில் ஆர்ஜேடி.க்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகள் முதல்கட்டதேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும்25-ம் தேதி முடிவடைய உள்ளது.ஜார்க்கண்டில் பாஜக கூட்டணிதொகுதிப் பங்கீட்டை சுமுகமாகமுடித்து, வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. ஆனால் இண்டியா கூட்டணியில் இன்னும் தொகுதிப்...
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், ககான்கிர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கவுன்ட்டர்-இன்டெலிஜென்ஸ் காஷ்மீர் (சிஐகே) அதிகாரிகள் காஷ்மீரின்சில பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிஐகே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீநகர், கந்தர்பால், பண்டி...
மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை அமித் ஷாவை சந்திக்க விருப்பம்
admin - 0
மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர்கடந்த ஆக.9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதிகேட்டு மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மாநில அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று 42 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 21-ம் தேதி தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இந்த சூழ்நிலையில், படு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை...
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் லாரன்ஸ் பிஷ்னோய் போட்டியா? – சர்வதேச குற்றவாளிக்கு மாநில அரசியல் கட்சி அழைப்பு
admin - 0
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாதா லாரன்ஸ்பிஷ்னோய்க்கு அம்மாநில அரசியல் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதை லாரன்ஸ் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றது. இது உண்மையா என மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வருகிறது. இதையடுத்து நடிகர் சல்மான் கானை கொல்லப்போவதாக...
வயநாடு: காலியாக உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (அக்.23) வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி. இதனையொட்டி அவர் நேற்று தாய் சோனியா காந்தியுடன் கேரளா வந்து சேர்ந்தார். முன்னதாக விமானம் மூலம் மைசூரு வந்த அவர்கள் இருவரும் அங்கிருந்து சாலை மார்க்கமாக கேரளா வந்தடைந்தனர்.
2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி என இரு தொகுதிகளிலும்...
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், ககான்கிர் பகுதியில் கட்டுமான தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கை லடாக்குடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் ககான்கிர் - சோனாமார்க் இடையே அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் 6.5 கி.மீ. தொலைவுக்கு வாகன சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. உ.பி.யை சேர்ந்த தனியார் நிறுவனம் இதன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின்...
திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சை கருத்து: பவன் கல்யாண் நேரில் ஆஜராக ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுபிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது ஏழுமலையான் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ...
கன்னடர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும்: பெங்களூரு மாநாட்டில் எடியூரப்பா வேண்டுகோள்
admin - 0
கர்நாடகாவில் கன்னடர் - தமிழர் இடையே எந்த வேறுபாடும் இல்லாமல், ஒற்றுமையாக வாழ வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா கேட்டுக்கொண்டார்.
பெங்களூருவில் தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் தலைமையில் கன்னடர்- தமிழர் ஒற்றுமை மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் எடியூரப்பா பேசியதாவது: எனது ஆட்சிக் காலத்தில் கர்நாடகாவில்...










