கு​வைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்​கப்​பட்​டது. இந்தியா, குவைத் இடையே 4 ஒப்பந்​தங்​களும் கையெழுத்​தாகின. குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்​தினம் அந்த நாட்டுக்கு சென்​றார். முதல் நாளில் தலைநகர் குவைத் சிட்​டி​யில் இந்திய வம்சாவளி​யினரை அவர் சந்தித்​து பேசினார். இந்திய தொழிலா​ளர்​களுக்கு அவர்...
பாஜக தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவின் 3 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஜனவரியுடன் முடிவடைந்தது. எனினும் மக்களவை தேர்தல் காரணமாக அவரது பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதுவும் கடந்த ஜுன் 30-ல் முடிவடைந்த நிலையில் அவர் பாஜக தேசிய தலைவராக தொடர்கிறார். இந்நிலையில் நாடு முழுவதிலும் மண்டலத் தலைவர்கள், பிறகு பாதி மாநிலங்களில் தலைவர் பதவிக்கான தேர்தலை பாஜக நடத்த உள்ளது. இவை வரும்...
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் தஹவ்வூர் ராணா. இவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த ராஜீய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது. தஹவ்வூர் ராணா பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட கனட நாட்டு குடிமகன் ஆவார். தற்போது அமெரிக்க அரசு இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ராணாவை நாடு கடத்த வேண்டும்...
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் இடம் பெற்றுள்ள திருமலையில் அரசியல் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தடையை மீறி அரசியல் பேசிய தெலங்கானா மாநில முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் பிஆர் நாயுடு எச்சரித்துள்ளார். இந்துக்களின் புனித திருத்தலமான திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள்...
வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் இருந்தது தொடர்பாக ஆந்திர மாநில போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், யண்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் துளசி. இவருக்கு அரசு சார்பில் வீட்டு மனை வழங்கப்பட்டது. இதில் அவர் தற்போது வீடு கட்டி வருகிறார். தனது இடத்தில் வீடு கட்டி கொடுக்க ஷத்ரிய சேவா சமிதி என்ற அமைப்புக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். அவர்கள் ஏற்கனவே வீட்டுக்குத் தேவையான டைல்ஸ்கள்...
முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அப்போதைய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில்...
உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதி சமாஜ்வாதி எம்.பி ஜியா உர் ரகுமான் வீட்டில் மின்சாரம் திருட்டு நடந்துள்ளதை கண்டுபிடித்த மின்சாரத்துறை அதிகாரிகள் ரூ.1.91 கோடி அபராதம் விதித்து மின் இணைப்பை துண்டித்தனர். உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதியில் உள்ள ஜமா மசூதியில் கடந்த மாதம் 24-ம் தேதி ஆய்வு நடத்த சென்றபோது வன்முறை ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இதில் இத்தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜியா உர் ரகுமான்...
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில், அருகே நின்றிருந்த சுற்றுலா பேருந்து பயணிகள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். 14 பேரை காணாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ராஜஸ்​தானின்...
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்க கோரி அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் தள தலைவர் சுப்ரியா ஸ்ரீநடே கூறியுள்ளதாவது: மாநிலங்களவையில் அம்பேத்கரை அவமரியாதை செய்யும் வகையில் அமித்ஷா பேசியதை காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் சமூக வலைதள நிர்வாகிகள் எக்ஸ் வலைதளத்தில் பகிரந்துள்ளனர்....
வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் விளையும் வெங்காயம் நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ள...