உத்தராகண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்கள் மீதுநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சில மாநிலங்களில் குற்றச் செயலில்ஈடுபடுவோருக்கு சொந்தமான கட்டிடங்களை (விதிகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி) உள்ளாட்சி நிர்வாகத்தினர் இடித்தனர். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இதுபோன்ற கட்டிடங்களை இடிக்கக் கூடாது என செப்டம்பர் 17-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில்...
இந்தோ-திபெத் எல்லை படைப்பிரிவின் நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்தரி மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா, சீனா இடையே 1962-ல் போர் நடைபெற்றது. இந்தப் போருக்குப் பிறகு அதே ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. சீனாவுடனான 3,488 கி.மீ. நீளம் கொண்ட எல்லையில் ஐடிபிபி படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐடிபிபி நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி...
நீதி தேவதை சிலை மற்றும் சின்னத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (எஸ்சிபிஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாற்றம் தொடர்பாக கருத்து கேட்கப்படவில்லை என அந்த சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நீதிபதிகளின் நூலகத்தில் ஆறடி உயரம் கொண்ட நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டது. பழைய சிலையுடன் ஒப்பிடும்போது புதிய சிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, பழைய நீதி தேவதையின் கண்கள்...
புவனேஸ்வர் / கொல்கத்தா: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டானா புயல் கரையைக் கடந்தது. வியாழக்கிழமை இரவு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை கரையைக் கடந்தது. வடக்கு ஒடிசா கடற்கரை அருகே உள்ள பிதர்கனிகா மற்றும் தாமரா இடையே அதிகாலையில் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 120 கி.மீ பலத்த காற்றுவீச தீவிர புயலாகக் கரையைக் கடந்தது. 6 மணி நேரம் புயல் கரையைக் கடந்தது...
பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறோம்; போரை அல்ல! – ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திட்டவட்டம்
admin - 0
'பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் இந்தியா ஆதரிக்கும், போரை ஆதரிக்காது' என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ரஷ்யாவின் கசான் நகருக்கு சென்றார். அன்று மாலை ரஷ்ய அதிபர்...
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக பேரணியாக சென்ற அவர், 35 ஆண்டுகளில் முதல் முறையாக எனக்காக பிரச்சாரம் செய்கிறேன் என்றார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், கேரளா சென்றுள்ள பிரியங்கா நேற்று வயநாடு...
ஒடிசா அருகே நாளை கரை கடக்கிறது டானா புயல்: தயார் நிலையில் மீட்பு படை; 150-க்கும் மேற்பட்ட ரயில் ரத்து
admin - 0
வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை அதிகாலை கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் டானா புயலாக தீவிரமடைந்துள்ளது. இது நேற்று ஒடிசாவுக்கு தென் கிழக்கே 560 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் தென்கிழக்கு பகுதியில் 630 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
120 கி.மீ. வேகத்தில்...
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிகள் இருவரை, அங்கு பணியாற்றும் துப்புரவு தொழிலாளி அக் ஷய் ஷிண்டே என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றது. பெற்றோர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்திய பின் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர்....
உத்தர பிரதேச மாநிலம் ஜாபர்பூர் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி இரு கோஷ்டிகளுக்கு இடையில் மோதல் ஏற்படுத்தப்பட்டது. அப்போது இருதரப்பும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பொதுமக்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த ஜஸ்வீர் சிங், தினேஷ்பூரை சேர்ந்த மன்மோகன் சிங், உ.பி. மாநில ராம்பூரை சேர்ந்த சாஹப் சிங் ஆகிய 3 பேர் தலைமறைவாயினர்.
இந்நிலையில் மேற்கூறிய 3 முக்கிய...
உயிர் சக்தி வேளாண்மை மூலம் மண்ணின் ஆரோக்கியம், விளைச்சலை மேம்படுத்தலாம்: வேளாண் நிபுணர் சுல்தான் இஸ்மாயில் கருத்து
admin - 0
உயிர் சக்தி வேளாண்மை முறையின் மூலம் மண்ணின் ஆரோக்கியம், பயிர் விளைச்சலின் அளவை மேம்படுத்த முடியும் என பெங்களூருவில் நடந்த மாநாட்டில் வேளாண் நிபுணர் சுல்தான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பின் 2 நாள் தேசிய மாநாடு பெங்களூருவில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பின் (Biodyanamic association of India) தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்...









