Google search engine
அகமதாபாத்: மும்பை - அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற் கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. குஜராத்தின் ஆனந்த் மாவட்டம், வசாத் என்ற கிராமத்தில் மகி ஆற்றின் அருகில் நேற்று முன்தினம் மாலை கட்டுமான அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கனரகஇயந்திரம் ஒன்றின் ரோப் அறுந்ததில் ஸ்டீல் மற்றும் கான்கிரீட்டால் ஆன பிளாக்குகள் கீழேவிழுந்தன. இதில் 4...
ராஞ்சி: சட்டவிரோதமாக சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது அரசியல் உதவியாளர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கில் சிபிஐ கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 23-ல் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மூன்று மாநிலங்களில் சிபிஐ திடீரென சோதனை நடவடிக்கைகளை தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாகிப்கஞ்சில் உள்ள 11 இடங்கள், ராஞ்சியில் 3 இடங்கள்,...
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 30 தலைவர்களை கட்சியிலிருந்து பாஜக நீக்கியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் 13 மற்றும் 20 தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சீட் வழங்கப்படாததால் பாஜகவைச் சேர்ந்த 30 பேர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட...
கடந்த அக்டோபர் மாதத்தில் காற்று மாசு அதிகம் மிகுந்த நகரங்கள் குறித்து எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மைய (சிஆர்இஏ)ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில், மிகவும் மாசடைந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. அதில், டெல்லியில் உள்ள காற்றில் சராசரி அளவிடப்பட்ட நுண்துகள்களின் (பிஎம்2.5) செறிவு ஒரு கன மீட்டருக்கு 110 மைக்ரோகிராமாக உள்ளது. இதையடுத்து, மாசடைந்த முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இதைத்...
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலின் சுற்றுப்புறச் சுவரில் விரிசல் கண்டறியப்பட்டுள்ளது. நவீன் பட்நாயக் தலைமை யிலான பிஜு ஜனதா தள கட்சியின் முந்தைய ஆட்சியில், கோயிலைச் சுற்றி இயந்திரங்களைக் கொண்டு தோண்டியதே விரிசலுக்குக் காரணம் என்று ஒடிசா மாநில பாஜக அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆதாரமில்லை: இதற்கு பதிலளித்த பிஜு ஜனதா தள எம்எல்ஏ கணேஷ்வர் பெஹ்ரா, “எந்த ஆதாரமும் இல்லாமல், எங்களால்தான் கோயில் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது...
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. மகாயுதியில் பாஜக 153, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 85, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 55, சிறிய கட்சிகள் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எம்விஏவில் காங்கிரஸ் 103, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா...
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று அவரிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி சித்தராமையாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தரா மையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்திய தற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை...
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய அறங்காவலர் குழுவை அறிவித்தது. இதில் அறங்காவலர் குழு தலைவராக சித்தூரை சேர்ந்த முன்னணி தொலைக்காட்சி நிறுவன அதிபர் ராஜகோபால் நாயுடு (பி.ஆர். நாயுடு) நியமிக்கப்பட்டார். உறுப் பினர்களாக ஆந்திரா, தெலங் கானா, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 24 பேர் நியமிக்கப்பட் டனர். இதில் தமிழகம் சார்பில் கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி ஆகிய...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அப்போது வக்பு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடை பெறும். இதற்காக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையை கூட்ட மத்திய அரசு பரிந்துரைத்தது. அதை ஏற்று நாடாளு மன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி...
உத்தரபிரதேச மாநில அரசு கொண்டு வந்து அமல்படுத்திய மதரஸா கல்விச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில், உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான அரசு, மதரஸா கல்விச் சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து அன்ஷுமன் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உத்தரபிரதேச மாநில அரசு கொண்டு வந்துள்ள மதரஸா...