ரூ.10 லட்சம் கோடி கடனுடன் ஆந்திராவின் கஜானாவையே முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காலி செய்துவிட்டார் என ஆந்திர மாநில நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநில நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணாவுக்கு காக்கிநாடா மாவட்ட பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர் நேற்று அம்மாவட்டத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிலர் கூட்டணி கட்சிகளுக்கிடையே பிரச்சனை வெடித்து வருவதாக வீண் புரளியை கிளப்பி...
கர்நாடகாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக லோக் ஆயுக்தாவின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி சந்திரசேகர் பெங்களூருவில் உள்ள சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ''மத்திய கனரக மற்றும் தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில், குமாரசாமியின் ஆதரவாளர் சுரேஷ் குமார் ஆகியோர் கடந்த 28-ம் தேதி...
வெளிநாடுகளில் சைபர் குற்ற கும்பல் பிடியில் 3,000 உத்தர பிரதேச இளைஞர்கள் சிக்கித் தவிப்பு: மீட்கும் பணி தீவிரம்
admin - 0
வெளிநாடுகளில் சைபர் குற்ற கும்பலின் பிடியில் உ.பி.யின் 3.000 இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய அரசின் உதவியுடன் இவர்களை மீட்கும் பணியில் மாநில காவல் துறை இறங்கியுள்ளது.
நாட்டில் சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதில் ’டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற குற்றம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் நடத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இதில் குறி வைக்கப்படுகின்றனர். இக்குற்றங்கள் கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியாட்நாமில்...
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் இரட்டை நிலையை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கட்சிகள் கடைபிடித்து வருகின்றன என்று பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கேரள மாநில பாஜக பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்ஃப் வாரியங்களில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு...
சூரிய ஒளிவட்டத்தை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியனின் புரோபா-3 விண்கலத்தை, பிஎஸ்எல்வி -எக்ஸ்எல் ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ அடுத்த மாதம் விண்ணுக்கு அனுப்புகிறது என மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் நேற்று கூறினார்.
இந்திய விண்வெளி கருத்தரங்கம் 3.0 புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சூரியனின் ஒளிவட்டம் பற்றிய ஆய்வில் ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன்,...
இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், எங்காவது ஓரிடத்தில் நிறுத்தித்தானே ஆகவேண்டும் எனவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (83) சூசகமாக தெரிவித்துள்ளார்.
அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிய இன்னும் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியான சரத் பவார் கடந்த 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை...
பொதுவெளியில் பாஜக தலைவரின் காலை தொட்டு வணங்கிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயலுக்கு ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
பிஹாரில் நடைபெற்ற சித்திரகுப்தா பூஜையில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஆர்.கே. சின்ஹா பங்கேற்றார். அப்போது, பொது வெளியில் அவரின் காலைத் தொட்டு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 25 -ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு...
தற்போது ரயிலில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாகழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 85 சதவீதம் பேர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில்வே சுற்றுலா என தனித்தனியாகச் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ரயில் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள், ஒருங் கிணைந்த சேவை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதைத் தொடர்ந்து ரயில்வேஅமைச்சகத்தின் அனைத்து சேவைகளையும்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இங்குஆண்டுதோறும் ஐப்பசி மற்றும் பங்குனி மாத திருவிழாவின் போதுஇங்குள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும். அதன்படி, ஐப்பசி திருவிழாவின் போது பரிவேட்டை மற்றும் ஆராட்டு விழா நடைபெறும்.
அப்போது பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து சுவாமி சிலைகள் வீதியுலாவாக எடுத்துச் செல்லப்படும். அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாகவே செல்லும்....










