‘இன்னர் லைன் பர்மிட்’ வழக்கு: மணிப்பூர் அரசு பதில் அளிக்க அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்
admin - 0
மணிப்பூரில் அமலில் இருக்கும் 'இன்னர் லைன் பெர்மிட்' (ஐஎல்பி) முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் 8 வார கால அவகாசம் அளித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து ஐஎல்பி அமலில் இருக்கும் நான்காவது மாநிலம் மணிப்பூர் ஆகும். இந்த மாநிலங்களுக்கு செல்ல நாட்டின் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் உட்பட வெளியாட்கள் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் ஐஎல்பி முறைக்கு...
உத்தர பிரதேசத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. ஒரு வாக்குச் சாவடியில் வாக்காளர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை பரிசோதிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சிலரை வாக்களிக்க விடாமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சமூக வலைதளத்தில் புகார் செய்திருந்தார்.
இந்தப் புகாரை மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் பரிசீலித்தனர். புகார் உண்மை...
காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
வாகன போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால், அங்குள்ள மக்கள் மூச்சுவிடுவதற்கே சிரமப்படும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், மாசை...
வன்முறை பாதித்த பெல்தங்கா பகுதிக்கு செல்ல முயன்றதாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை ஒட்டி அமைந்துள்ள பெல்தங்கா பகுதியில் கடந்த சனிக்கிழமை இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக அப்பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று...
எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் பிராந்திய சுயாட்சிக்கு ஆதரவான கருத்தை கூறியிருந்தார். பிறகு அப்பதிவை நீக்கிவிட்டார்.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதத்தில், “மணிப்பூர் விவகாரம் தொடர்பான...
தன்னுடைய புகைப்படங்களை மனைவியும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான அனுபா முஞ்சாரே பயன்படுத்துவதற்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் கங்கர் முஞ்சாரே ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்தவர் கங்கர் முஞ்சாரே. இவரது மனைவி அனுபா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பாலகாட் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று தனது பிறந்தநாளை...
பாரத ஸ்டேட் வங்கிக் கிளையின் லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளை உள்ளது. இக்கிளைக்கு பாதுகாவலர் இல்லாததால், இங்கு கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். முன்னதாக அந்த வங்கியின் அலாரத்துக்கான வயரை துண்டித்துள்ளனர். அதன் பின்னர், வங்கியில் இருந்த ஜன்னலின்...
ஆந்திராவில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனை: சந்திரபாபு நாயுடு உறுதி
admin - 0
ஆந்திராவில் வீட்டுமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு உறுதி கூறினார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைத்து நேற்றுடன் 150 நாட்கள் ஆகிறது. இதையொட்டி நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: சுமார் 40 ஆண்டுகளாக மக்கள் என்னை ஆதரித்து வருகின்றனர். இதற்காக மக்களுக்கு பணியாற்றநான் கடமைப்பட்டுள்ளேன். இத்தனை வருடங்களில் பல இன்னல்கள் கடந்து வந்துள்ளேன்.
செய்யாத...
வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களிப்பர் என்பதால், மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெறும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டப் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானேவில் உள்ள கோப்ரி - பச்பகாடி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். இத்தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். தனது வாக்கை பதிவு செய்தபின் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில்...
சத்தீஸ்கர் மசூதிகளில் சொற்பொழிவுக்கு அனுமதி அவசியம்: வக்பு வாரிய உத்தரவுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு
admin - 0
சத்தீஸ்கர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகள் நடக்கும். அப்போது இமாம் அல்லது அப்பகுதி முத்தவல்லிகள் இஸ்லாமிய சொற்பொழிவு ஆற்றுவார்கள். அதற்கு அனுமதி அவசியம் என்று சத்தீஸ்கர் வக்பு வாரியம் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் வக்பு வாரிய தலைவர் டாக்டர் சலீம் ராஜ் வெளியிட்ட உத்தரவில், “மசூதிகளில் தொழுகைக்கு பின் சொற்பொழிவாற்ற இனி வக்பு வாரியத்தின் அனுமதி அவசியம். மீறுபவர்கள் மீது...










