பிப்ரவரியில் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் வெளியீடு: 25-ல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்
admin - 0
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது.
திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு ஆன்லைன் டிக்கெட் நேற்று காலை 10 மணிக்கு வெளியானது.
நாளை 23-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண சேவைக்கும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை சேவைக்கும், பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்குமான...
நாள் முழுவதும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.
நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர்நீதிமன்றம், கொல்லம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கி வைத்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவை, ராஜேஷ் பிண்டால் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தின் இதர டிஜிட்டல் சேவைகளை தொடங்கிவைத்தனர். இந்த ஆன்லைன் நீதிமன்றம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த...
தெலங்கானா மாநிலம் வாரங்கல் ராம்பல்லியை சேர்ந்தவர் ஏலேந்தர் (35). இவர் கினரா எனும் இடத்தில் சொந்தமாக வீடுகட்டி வருகிறார். இவர் புதன்கிழமை மாலை புதிதாக கட்டப்பட்டு வரும் தனது வீட்டை காண பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் ஏலேந்தர் தூக்கி எறியப்பட்டார். இதனை பார்த்து பொதுமக்கள் கூச்சலிடவே, லாரி ஓட்டுநர் லாரியை பின்னால் எடுத்தார். இதனால், லாரியின் சக்கரம், சாலையில் விழுந்த...
டெல்லி முதல்வராக பதவி வகித்த அர்விந்த் கேஜ்ரிவால், பிளாக்ஸ்டாப் சாலையில் 6-ம் இலக்கத்தில் உள்ள அரசு பங்களாவில் தங்கி இருந்தார். அப்போது, இந்த பங்களாவை பல கோடி செலவில் புதுப்பித்ததாகவும் இதில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்தது. மேலும் அதில் பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், முதல்வரின் அரசு இல்லத்தை புதுப்பித்தபோது ஆடம்பர பொருட்கள் வாங்கப்பட்டதைக் கண்டித்து பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று...
இந்தியாவின் அரிய மொழிகளின் முதல் மொழிபெயர்ப்பு நூல் திருக்குறள்: மத்திய அரசின் சிஐசிடி வெளியிடுகிறது
admin - 0
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணை பட்டியலில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுடன் நாடு முழுவதும் பல மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் பலவற்றுக்கு எழுத்துகள் கிடையாது. இதுபோன்ற அரிய மொழிகளை பேசுபவர்களும் படிக்கும் வகையில் திருவள்ளுவரின் திருக்குறள் வெளியாகிறது.
இந்த தகவலை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) திருக்குறளை மொழிபெயர்த்து வருகிறது....
மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கேஜ்ரிவால் மீதான விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
admin - 0
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த நிதி மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் உச்ச...
குறிப்பிட்ட மாநிலங்களில் மின் ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் கால கட்டங்களில் எதிர்க்கட்சிகளே அப்போது ஆட்சியில் இருந்ததாக பாஜகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித் மாள்வியா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு (நவ.25) முன்பாக, அதே போல டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியை ஏற்க உள்ள நிலையில் அதானி மீதான குற்றச்சாட்டு...
இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் – வழக்கின் பின்னணி என்ன?
admin - 0
தமிழகம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி (62), உலக பணக்காரர் பட்டியலில் 17-வது இடத்திலும், இந்திய அளவில் 2-வது இடத்திலும் உள்ளார். இந்த...
கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிடோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே...
உ.பி.யில் சாக்கு பையில் இளம் பெண் சடலம்: பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் கொலை என குற்றச்சாட்டு
admin - 0
உத்தர பிரதேசத்தில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்ற கர்ஹல் தொகுதியில், இளம் பெண் ஒருவரின் உடல் சாக்கு பையில் கிடந்தது. பாஜக.வுக்கு ஆதரவு தெரிவித்ததால் சமாஜ் வாடி கட்சியைச் சேர்ந்த உள்ளூர் நபர் இந்த கொலையை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் கதேஹரி, கர்ஹல், மிராபூர், காஜியாபாத் உட்பட 9 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கர்ஹல் தொகுதியில் இளம் பெண்...










