பிஹாரில் நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கடந்த ஜூலை 25-ம் தேதி பந்த் நடைபெற்றது.
சிவான் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாணவர்கள், கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், இது...
வரும் 2029-ம் ஆண்டில் போதையில்லாத இந்தியா உருவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கோவாவின் பனாஜி நகரில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்கு போதையில்லாத இந்தியா உருவாவது அவசியமாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல்களால் நாடு முழுவதும் நக்சல் தீவிரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்துள்ளோம். குறிப்பாக காஷ்மீரில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு...
ம.பி.யில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழப்பு: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
admin - 0
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டம், பராஜ் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் பலர் நேற்று முன்தினம் இரவு அங்கு விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை வாங்கி குடித்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு குமட்டல், வாந்தி போன்ற உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. அவர்களை குடும்பத்தினர் உடனடியாக பண்டா சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல அருகில்...
குஜராத்தில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், பேருந்து நிலையத்தில் குற்ற நிகழ்வை நடித்துக் காட்டிய கொலையாளியைக் காவல் துறையினர் லத்தியால் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்த ஃபைசல் (20) மீது திருட்டு மற்றும் வன்முறை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் காஜல்பன் பரையா (40) என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளாக ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்து வந்தார்....
உத்தர பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள வாராணசியில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் அபாய எச்சரிக்கை அளவைத் தாண்டிச் செல்கிறது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் அனைத்து படகு சேவைகளையும் நிறுத்தி வைத்ததுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியது. மேலும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் படித்துறைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், வாராணசி மக்களவைத் தொகுதி...
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, நீர்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சத்யேந்தர் ஜெயின். அப்போது, டெல்லி குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான டெண்டர் யூரோடெக் என்விரான்மென்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு குற்றம் சாட்டியது. குறிப்பாக, பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் கமிஷன் தொகைகள் குற்றம்சாட்டப்பட்ட பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதற்கான...
பாகிஸ்தான் எப்-16 போர் விமானத்தை வீழ்த்திய குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான், இந்திய விமானப்படையில் இருந்து விலகி கோவாவை சேர்ந்த ‘பிளை 91’ என்ற தனியார் விமான நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
2019 பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானின் பாலகோட் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. மறுநாளே இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை, அன்றைய விங் கமாண்டர் அபினந்தன் தனது மிக்-21 பைசன்...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணை நிர்வாக அதிகாரி லோகநாதத்தை, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக திருப்பதி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று காலை கைது செய்தனர். மேலும், இவர் கலப்பட நெய் விவகாரத்திலும் ரகசியமாகத் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஏழுமலையான் கோயில் வளாகத்திற்குள் இணை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் லோகநாதம். இவர் கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே...
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை (எப்சிஆர்ஏ) ஆய்வு செய்ய 31 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்கு முறை) சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்த சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டன.
கடந்த 2020-ம் ஆண்டில் பிரதமர்...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக அங்கு சிக்கித் தவித்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ளனர், மரணத்தை நேரில் பார்த்தோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உள்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். அந்த வகையில் மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, அசாம்...









