பிஹாரில் சுதந்திர போராட்ட தியாகியின் பிறந்த நாள் விழாவில் அவரது மகனுக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும் ராகுல் காந்தியை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்லால் சவுத்ரி சுதந்திரப் போராட்ட தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தலித் தலைவரான இவர், பெண்கள் உரிமை, தலித் மேம்பாடு உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். தொண்டு நிறுவனம் சார்பில் இவருடைய பிறந்தநாள் விழா நேற்று முன்தினம்...
ஜம்மு காஷ்மீரில் 17 மர்ம மரணம்: ரஜவுரியில் உரம், பூச்சிக்கொல்லி கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
admin - 0
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், புதால் கிராமத்தில் கடந்த டிசம்பர் 7 முதல் ஜனவரி 19 வரை மர்ம நோய் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று கூறுகையில், “17 பேர் மர்ம மரணம் தொடர்பான விசாரணை...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 8,715 பேர் நாகா துறவிகளாகி விட்டனர். இவர்களில் தலித் மற்றும் பழங்குடிகள் எண்ணிக்கை முதல்முறையாக 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமக் கரையில் மகா கும்பமேளா ஜனவரி 13-ல் தொடங்கியது. நாட்டின் 13 அகாடாக்களின் அனைத்து துறவிகளும் இங்கு கூடியிருந்தனர். இவர்களது முகாமின் பல நிகழ்ச்சிகளில் முக்கியமானது புதிய துறவிகளை தங்கள் அகாடா குழுக்களில் சேர்ப்பது ஆகும். இந்தமுறை, 144 வருடங்களுக்கு...
யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: டெல்லி திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் இண்டியா தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
யுஜிசி வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற திமுக மாணவரணி ஆர்பாட்டத்தில் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் என இண்டியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு ( யுஜிசி) வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல அரசியல் கட்சித்தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின்...
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றநீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்...
ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி செல்லலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
admin - 0
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடிக்கடி சுங்கச் சாவடிகளை கடந்து சென்று வரும் உள்ளூர்மக்களின் வசதிக்காக மாத சலுகை கட்டணத்தில் ‘பாஸ்’ பெறும் வசதியும் உள்ளது.
இதற்கிடையே,...
அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கிடப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் இந்தியாவுக்கு 104 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். அமெரிக்க ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்ட அவர்களது கை, கால்களில் விலங்கிடப்பட்டு இருந்தது.
இதை கண்டித்து, மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
இதுதொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக...
தான் பெற்ற கடன் தொகைக்கும் கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுவிட்டதாகவும் அது தொடர்பான விவரங்களை வழங்கக் கோரியும் விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்குமாறு வங்கிகளுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைடெட் ப்ரூவரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என அவர் மீது புகார்...
கடந்தாண்டில் 22 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு: 1 மணி நேரத்தில் 60 குழந்தைகள் மீது தாக்குதல்
admin - 0
நாட்டில் கடந்தாண்டு சுமார் 22 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர் என்றும், சராசரியாக ஒவ்வொரு மணி நேரமும் 60 குழந்தைகளை நாய்கள் கடிப்பதாக அரசு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய்கடி பாதிப்பு பற்றி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்தாண்டில் 21,95,122 பேரை நாய்கள் கடித்துள்ளன. இவர்களில் 37 பேர் இறந்தனர். குரங்கு உட்பட இதர விலங்குகள்...









