அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக 4 ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்றி பாஜக சாதனை படைத்துள்ளது.
தலைநகர் டெல்லியில், அம்பேத்கர் நகர், கோகல்பூர், சீமாபுரி, மங்கள்புரி, சுல்தான்பூர் மஜ்ரா, பவானா, கரோல் பாக், படேல் நகர், தியோலி, மடிபூர், கொண்டிலி மற்றும் திரிலோக்புரி ஆகிய 12 தொகுதிகள் பட்டியல் இனத்தவர்களுக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 மற்றும் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ஆம்...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இன்னும் 19 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 50 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக நகரத்தில் 19-வது செக்டாரில் “கல்பவாசி” கூடாரத்தில் நேற்று திடீரென தீப்பற்றியது. வாயு கசிவால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த...
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் ஆதிஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. கடந்த 27 ஆண்டுக்குப் பின்னர் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் தொடர்ந்து 3-வது தேர்தலிலும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில்,...
டெல்லியில் பாஜக.வுக்கு கிடைத்த வெற்றி முக்கியமான அரசியல் மாற்றம்: சர்வதேச ஊடகங்கள் கருத்து
admin - 0
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக. பெற்ற வெற்றி, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இதை முக்கியமான வெற்றி, மிகப் பெரிய அரசியல் மாற்றம் என சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “டெல்லி தேர்தல் முடிவு, பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு முக்கியமான வெற்றி. நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் கட்டமைப்பில் கவனம் செலுத்தி பாஜக சிறப்பாக பிரச்சாரம் செய்தது. நகர்ப்புற மையங்களில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு...
மத்திய பிரதேசத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மத்திய பிரதேசத்தின் நீமச் மாவட்டம், தாடா பஞ்சாயத்து தலைவராக கைலாஷி பாய் கசாவா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த மாதம் இவர் தனது பதவிக்கான அதிகாரங்கள், உரிமைகளை உள்ளூர் ஒப்பந்ததாரர் சுரேஷ் என்பவருக்கு தாரைவார்த்து உள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே ரூ.500 மதிப்புள்ள முத்திரை தாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் கைலாஷி பாய் கசாவா...
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மிக்கான நேரடி மோதலில், காங்கிரஸ் கட்சி போட்டியிலேயே இல்லாத நிலை இருந்தது. 3-வது முறையாக இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை.
இருப்பினும், இந்த தேர்தலில் 6.34 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2020 தேர்தலில் பெற்றதை விட 2 சதவிகிதம் அதிகம். பாஜக 45.56 சதவீதம், ஆம் ஆத்மிக்கு 43.57 சதவீத வாக்குகளை பெற்றன. இவற்றுக்கிடையேயான...
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கொள்முதல் செய்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்தது.
இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கோயிலின் புதிய நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ்...
விமானப்படையின் மிராஜ் ரக போர் விமானம் மத்தியப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 2 பைலட்டுகளும் உயிர் தப்பினர்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து மிராஜ் 2000 ரக விமானம் நேற்று வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 2 பைலட்டுகள் சென்றனர். நடுவானில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு, விபத்து ஏற்படும் சூழல் உருவானதால், பைலட்டுகள் இருவரும் பாராசூட் மூலம்...
ஆந்திராவில் சிறந்த முறையில் பணியாற்றி, கோப்புகளை சரிபார்த்து உடனுக்குடன் பணிகளை முடிக்கும் சிறந்த அமைச்சர்களின் பட்டியலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே நேற்று வெளியிட்டார். இதில் அவர் 6-ம் இடத்தில் உள்ளார்.
அமராவதியில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடாது, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்ற வேண்டும் , அரசு ஆசிரியர் பணி இடங்கள்...
அவசரநிலை காலத்தில் பேச்சுரிமையை நசுக்கியது காங்கிரஸ்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
admin - 0
காங்கிரஸ் கட்சி அவசரநிலை காலத்தில் பேச்சுரிமையை நசுக்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த சில தினங்களாக மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: குடியரசுத் தலைவரின் உரை நமக்கு உத்வேகம் அளிப்பதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அத்துடன் நாம்...









