நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
இப்போது விசாகப்பட்டினம், மர்மகோவா, நியு மங்களூரு, கொச்சி, மும்பை மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய துறைமுகங்களில் நீர்வழி சுற்றுலா முனையங்கள் உள்ளன. நீர்வழி சுற்றுலா திட்டத்தின் மூலம்...
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி மும்பை பெண்ணிடம் மோசடி: ஆடைகளை களைய செய்து கொடூரம்
admin - 0
'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்திருப்பதாக மிரட்டி மும்பை பெண்ணிடம் ரூ.1.8 லட்சத்தை மர்ம நபர் பறித்துள்ளார். அதோடு வீடியோ காலில் அந்த பெண்ணின் ஆடைகளை களைய செய்து கொடூமைப்படுத்தி உள்ளார்.
'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் நாடு முழுவதும் புதிய மோசடி அரங்கேறி வருகிறது. பொதுமக்களை வீடியோ காலில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களை சிபிஐ, போலீஸ், வருமான வரி, சுங்கத் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொள்கின்றனர்....
மசூதிகளை ஆய்வு செய்ய ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு தேசிய மாநாட்டு கட்சியின் காஷ்மீர் மாகாண தலைவர் சவுகத் மிர் தனது கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல இடங்களில் மசூதிக்கு அடியில் கோயில் இருப்பதாகவும், அங்கு கள ஆய்வு நடத்த வேண்டும் என பலர் மனு தாக்கல் செய்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் சம்பலில் ஜாமா மசூதியில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கள ஆய்வு நடத்த சென்றபோது...
மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்யப்படுவார் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா அணி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தற்போது மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்களாக தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் பதவி வகிக்கின்றனர். இந்த சூழலில், புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை நியமிக்க பாஜக தலைமை...
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்ட வக்பு வாரியம் கலைக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆந்திர சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 30-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், ‘ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, 11 உறுப்பினர்கள் அடங்கிய வக்பு வாரிய குழுவை அப்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைத்தது. இதுதொடர்பாக, முந்தைய...
ஃபெஞ்சல் புயல், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக சார்பில் மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51...
பிரதமருடன் பெண் கமாண்டோ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கி உள்ள குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி, எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் உயரடுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். கடந்த 1985-ம் ஆண்டில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்த படையினர், பிரதமர் பயணமாகும் இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை வழங்குவர்.
இந்த...
நாகாலாந்து கிரிப்டோ ஊழல் வழக்கில் சீனர்களுக்குச் சொந்தமான ரூ.106 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
நாகாலாந்து மாநிலம் கொஹிமா நகரில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கிரிப்டோவில் ரூ.57 ஆயிரம் முதலீடு செய்தால் தினமும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, செல்போன் செயலி மூலம் ஏராளமானோர் அதில் முதலீடு செய்தனர். இந்நிலையில், நிறுவனம் அறிவிப்பு செய்தபடி அந்த முதலீட்டாளர்களுக்கு முதல் 3 மாதங்களுக்கு...
பெண்கள் குறித்து அவதூறாக பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் சவுண்டாலா கிராமம் அமைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அந்த கிராமத்தில் 1,800 பேர் வசிக்கின்றனர். மகாராஷ்டிராவின் முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக சவுண்டாலா போற்றப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டில் எவ்வித மோதலும் இல்லாத கிராமம் என்ற விருதை சவுண்டாலா பெற்றது.
கணவரை இழந்த...
குஜராத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாக மிரட்டி, ரூ.1 கோடியே 15 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஒரு வாட்ஸ் அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் சிபிஐ அதிகாரி என்றும்,...










