குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை கோரும் மனு குறித்து மத்திய அரசு, தலைமை தேர்தல் ஆணையம் 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவர். அவர்களின் தண்டனை காலம் முடிந்து விடுதலையான நாள் முதல் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்" சுரண்டலுக்கு மறுபெயராக திரிணமூல் காங்கிரஸ் மாறிவிட்டது" என்று கடுமையாக சாடினார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: அடித்தட்டில் உள்ள மக்களுக்காக வேரூன்றியிருப்பதாக பேசிக் கொள்ளும் திரிணமூல் காங்கிரஸ் தற்போது அம்மக்களின் உரிமைகளை மறுப்பது மற்றும் துன்புறுத்துவதின் அடையாளமாக மாறியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் ஊழலை நிறுவனமயமாக்கியுள்ளது, நிறுவனங்களை அழித்துவிட்டது. சுரண்டலின் ஒரு சொல்லாக அது மாறிவிட்டது. மற்ற மாநிலங்களைப் போலவே...
வாகனங்களில் பொருத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை அதானி டிபன்ஸ் & ஏரோஸ்பேஸ், டிஆர்டிஓ இணைந்து நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதானி டிபன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதானி டிபன்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்பு அராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து வாகனங்களில் பொருத்தக்கூடிய வகையிலான வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. இதனை டிஆர்டிஓ அமைப்பின் பொது இயக்குநர் (எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் சிஸ்டம்) பி.கே. தாஸ்...
இருபது ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகன பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிஎஸ்-2 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிப்பவை என வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து படிப்படியாக நீக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான...
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவின் அக்னூர் செக்டார், லலேலி பகுதியில் கட்டுப்பாட்டுக்கு எல்லைக் கோட்டுக்கு அருகில் ராணுவ வீரர்கள் நேற்று பிற்பகலில் ரோந்து சென்றனர். அப்போது தீவிரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் கேப்டன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ...
உத்தரபிரதேசத்தை போலவே கர்நாடகாவில் நடைபெறும் கும்பமேளாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நீராடினர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா திருவிழா களைகட்டியுள்ளது. இதேபோல் கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள டி.நரசிப்புராவில் காவிரி, கபிலா, ஸ்படிகா ஆகிய மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நேற்று முன்தினம் 13-வது கும்பமேளா தொடங்கியது. தென்னிந்தியாவின் பிரயாக்ராஜ் என அழைக்கப்படும் இந்த கும்பமேளா பிப்ரவரி 12ம் தேதிவரை (இன்று) 3...
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சிவசேனா கட்சியின் (உத்தவ் பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என கட்சித்தலைவரும்,...
இந்தியாவின் எரிசக்தி துறையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். டெல்லியில் 4 நாள் நடைபெறும் இந்தியா எரிசக்தி வார நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவில் முதலீட்டுக்கான பல வாய்ப்புகள் உள்ளன. இதனை முதலீட்டாளர்களான நீங்கள் ஆராய்வீர்கள் என நம்புகிறேன். 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என எல்லா நிபுணர்களும்...
தற்போதைக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள தரவுகளை அழிக்கவோ அல்லது புதிய தரவுகளை சேர்க்கவோ வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) பதிவான தரவுகளை அழிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தாக்கல்...
ஆந்திர மாநிலத்தில் இரு கோதாவரி மாவட்டங்களிலும் சுமார் 5 லட்சம் கோழிகள் இறந்து போனதற்கு பறவை காய்ச்சலே காரணம் என மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதனால் கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதித்து ‘ரெட் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திராவில் கறிக்கோழியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், கிழக்கு மற்றும் மேற்கு...