முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, உலகளவில் அதிலும் முக்கியமாக இந்தியாவில் உள்ள 32 லட்சம் கோயில்களை ஒற்றைக் கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலாக்களை முறையாக ஊக்குவிக்கும் வகையில் இதுவரை செய்யாத முன்னோடி திட்டமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ரூ.6 லட்சம் கோடி ரூபாய் மதி்பபுள்ள பொருளாதாரத்தை உள்ளடக்கிய முக்கியமான கோயில்களை ஒரே நெட்வொர்க் சங்கிலியின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது, மக்கள் எளிமையாகவும்,...
மகாகும்பமேளாவில் மகி பவுர்ணமி தினத்தையொட்டி 73.60 லட்சம் பக்தர்கள் நேற்று புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. நாடெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தரள் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மகி பவுர்ணமி தினமாகும். மகத்தான இந்நாளில் நீராடுவதற்காக நேற்று அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். நேற்று மட்டும் 73.60 லட்சம் பக்தர்கள் நீராடியதாகத் தெரியவந்துள்ளது. திரிவேணி...
கேரளாவில் அரசு செவிலியர் கல்லூரியில் இளநிலை மாணவர்களை ராகிங் செய்ததாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் நகரில் அரசு செவிலியர் கல்லூரி உள்ளது. இதில் முதலாமாண்டு படித்து வரும் 3 மாணவர்கள், கோட்டயம் நகரில் உள்ள காந்திநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தனர்.
அதில், “மூன்றாமாண்டு பயிலும் 5 மாணவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து எங்களை உடல் ரீதியாகவும்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் ஃபல்நார் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியில் ஈடுபடும் சி-60 கமாண்டோ படையினர் கட்சிரோலி பகுதியில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு மாவோயிஸ்ட் முகாம் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டது. அப்போது இரு...
ஆந்திராவில் பெண்களின் நலனுக்காக, ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டம் விரைவில் தொடங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
வரும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஆந்திராவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு வீட்டில் இருந்தவாறே பணியாற்றும் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டத்தை தொடங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் முதலில் வெள்ளோட்டமாகவும், பிறகு மாநிலம் முழுவதுமாகவும் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஆந்திர...
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தங்கி விடுகின்றனர். அத்துடன் அவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உட்பட இந்தியர்களுக்கான அனைத்து ஆவணங்களையும் போலி ஆவணங்கள் மூலம் பெற்று...
‘‘இலவச ரேஷன் மற்றும் உதவித் தொகையால் மக்கள் வேலைக்கு செல்ல தயார் இல்லை. இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல’’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வீடுகள் இல்லாமல் பலர் பிளாட்பாரங்களில் தங்கியுள்ளனர். அவர்களின் இருப்பிடம் உரிமை தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.காவை மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல்...
இதோ வந்து விட்டது - புதிய வருமான வரிச் சட்ட வரைவு மசோதா. இது எந்த அளவுக்கு நமது எதிர்பார்ப்புகளை நம்பிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறது..?
வரைவு மசோதா, தொடக்கத்தில் இப்படிச் சொல்கிறது: இப்போது உள்ள வருமான வரி சட்டம் 1961, கடந்த 60 ஆண்டுகளில் எண்ணற்ற திருத்தங்களைக் கண்டுள்ளது. இதன் மூலம் வருமான வரிச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானம் அதிக சுமைகளை தாங்கி விட்டது; இதன் மொழி மிகவும் சிக்கலானதாக...
எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட உள்ளது.
2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் பிப்.1-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில், இன்று இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. "வருமான வரி மசோதா 2025” என்று அழைக்கப்படும் இந்த புதிய...
பிரதமர் மோடி பயணிக்கும் விமானத்தை தீவிரவாதிகள் தாக்க சதி? – மும்பை போலீஸுக்கு வந்த எச்சரிக்கை
admin - 0
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் அமெரிக்கப் பயணத்துக்கு முன்னதாக, அவர் பயணிக்கும் விமானத்திற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டது.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். அவர் தனது பிரான்ஸ் பயணத்தை நேற்று முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் மும்பை காவல் துறை கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட ஒருவர் பிரதமர் மோடியின்...









