வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உதவ வேண்டும்: தன்னார்வலர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
admin - 0
வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இலக்கை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் (பிஏபிஎஸ்) சன்ஸ்தா (ஆன்மிக அமைப்பு) சார்பில் கார்யகர் சுவர்ன மஹோத்சவ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று...
நிரந்தர வைப்பு நிதிக்கு (பிக்ஸட் டெபாசிட்) அதிக வரி பிடித்தம் செய்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வங்கி மேலாளரை வாடிக்கையாளர் ஒருவர் புரட்டி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
43 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், வாடிக்கையாளர், வங்கி மேலாளர் ஒருவருக்கொருவர் தங்களது சட்டை காலரை பிடித்து அடித்துக் கொள்கின்றனர். மேலாளரின் தலைமுடியை பிடித்து இழுக்கின்றார் வாடிக்கையாளர். அப்போது, அருகில் இருந்த சக பெண் ஊழியர் மேலாளரின் பெயரைக்...
கேரள பாதிரியார் கார்டினலாக நியமிக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்: பிரதமர் மோடி வாழ்த்து
admin - 0
கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: புனித போப் பிரான்சிஸ் அவர்களால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் நியமிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி. இது, இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம், பெருமையாகும். இயேசுவின் தீவிர சீடராக விளங்கும்...
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் தம்பியின் உடலை கார் மேற்கூரையில் கொண்டு சென்ற அக்கா
admin - 0
உத்தராகண்டில், ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் தம்பியின் உடலை வாடகை காரின் மேற்கூரையில் வைத்து அவரது அக்கா வீட்டுக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
உத்தராகண்டின் பித்தோரகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த் பிரசாத். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வயது முதுமை காரணமாக கோவிந்த் பிரசாத் வீட்டில் ஓய்வெடுக்கிறார். மூத்த மகள் ஷிவானி, உத்தராகண்டின் ஹால்டுகார் பகுதியில் உள்ள நிறுவனத்தில்...
மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் நுழைந்த ஒருவர், பிரார்த்தனை செய்துவிட்டு ரூ.1.57 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் மச்சல்பூர் மாவட்டம் சோயத் கலன் - சுஜால்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஊழியர்கள் தூக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள அலுவலகத்தில் நுழைந்த ஒருவர், ரூ.1.57 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, சம்பவ...
உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த முஸ்லிம் தம்பதி இஜாசுல் -நிதா. சம்பல் வன்முறை தொடர்பான வீடியோவை பார்த்த நிதா கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் எடுத்த நடவடிக்கையை பாராட்டி பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் இஜாசுல் மூன்று முறை தலாக் சொல்லி நிதாவை விவாகரத்து செய்துள்ளார். இந்த செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரேபிய மொழியில் தலாக் என்றால் விவாகரத்து என்று அர்த்தம்.
இதுகுறித்து புர்கா அணிந்தபடி...
உத்தராகண்ட் மாநிலத்தில் குளிர்கால சார்தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை மாநில அரசு தொடங்கியுள்ளது என்றும், இது உத்தராகண்ட் மாநில சுற்றுலாவில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும்’’ என முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
கேதார்நாத் கோயிலில் நேற்றுமுன்தினம் வழிபாடு நடத்திய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குளிர்கால சார்தாம் யாத்திரை குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த முறை குளிர்கால புனித பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதற்கான திட்டங்கள், ஏற்பாடுகள்...
போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுவிப்பு: 25 ஆண்டுகளுக்குப் பின் மும்பை திரும்பிய நடிகை மம்தா குல்கர்னி
admin - 0
போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி (வயது 52) மும்பைக்கு திரும்பியுள்ளார்.
கரண் அர்ஜுன் உட்பட ஏராளமான இந்தி படங்களில் நடித்திருப்பவர் நடிகை மம்தா குல்கர்னி. இவர் முதன்முதலில் தமிழ் படத்தில்தான் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டுக்குச் சென்றார். தமிழில் 1991-ம் ஆண்டு வெளிவந்த நண்பர்கள் என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். இந்தப் படத்தை நடிகர் விஜய் தயாரிக்க, அவரது...
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற தலித் அல்லாத மனைவியின் குழந்தைக்கு எஸ்சி சாதி சான்றிதழ்: உச்ச நீதிமன்றம்
admin - 0
தலித் கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் நிலையில், தலித் அல்லாத அவரின் மனைவியின் பராமரிப்பில் வளரும் அவர்களது குழந்தைகளுக்கு எஸ்சி சாதிச் சான்றிதழை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
ஜுஹி போரியா நீ ஜவால்கர் மற்றும் பிரதீப் போரியா தம்பதியினர் விவாகரத்து கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குநீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று...
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் பி.அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் விமர்சனத்தால் பல்லடம் படுகொலை சம்பவம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, அச்சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்னும் முறையான துப்பு கிடைக்காமல் தமிழக...










