Google search engine
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்குவேன். வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக என்னுடைய குழுவினர் ஒரு விரிவான திட்டத்தை தயாரித்து வருகின்றனர். மக்கள் ஆதரவுடன் டெல்லியில் அடுத்த 5 ஆண்டுகளில் வேலையின்மை...
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் மாஹேஜி மற்றும் பர்த்ஹடே ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை லக்னோ- மும்பை எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீப்பற்றியதாக யாரோ ஒருவர் புரளி கிளப்பியதால், ரயிலில் இருந்த சில பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். சிலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்து வெளியேறினர். அப்போது அந்த வழியாக சென்ற பெங்களூர் - டெல்லி கர்நாடகா எக்ஸ்பிரஸ்...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பத்திரிகையாளர்களை விட அதிக எண்ணிக்கையில் யூடியூபர்கள் கேமராக்களுடன் வலம் வருகின்றனர். பெரும்பாலும் உள்ளூரை சேர்ந்த இவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இவர்களும் பல்வேறு பாபாக்களை பேட்டி எடுத்து தங்கள் சந்தாதாரர்களை கூட்ட யூடியூப் சேனல்களில் வைரலாக்குகின்றனர். இந்நிலையில் இந்த யூடியூபர்களில் 4 பேர் நேற்று முன்தினம், இடுக்கி பாபாவின் தாக்குதலுக்கு ஆளாகினர். ஜுனா அகாடாவை சேர்ந்த இந்த துறவி, பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்ய தான் வைத்திருக்கும்...
டெல்லிக்கு முன்னாள் பிரதமர் ஷீலா தீட்சித் மாடல் வளர்ச்சி தேவை, பிரதமர் மோடியின் பொய் பிரச்சாரமும், கேஜ்ரிவால் மாடலும் தேவையில்லை என முகநூலில் வீடியோ வெளியிட்டு ராகுல் பிரச்சாரம் செய்துள்ளார். டெல்லியில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டெல்லி சதார் பஜார் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால் உடல்நிலை பாதிப்பு...
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா மீதான காசோலை மோசடி வழக்கில் அந்தேரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஒய்.பி. பூஜாரி வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நெகோஷியபிள் இன்ஸ்ட்ரூமென்ட் சட்டத்தின் கீழ் ராம் கோபால் வர்மா மீதான குற்றம் நிரூபணமாகியுள்ளது. எனவே, அவருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டும் பிறப்பிக்கப்படுகிறது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் ராம்கோபால் வர்மா புகார்தாரருக்கு இழப்பீட்டு...
வளர்ந்த இந்தியா இலக்கை அடைய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளையொட்டி அவர் பிறந்த ஒடிசாவின் கட்டாக் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பிரதமர் பேசியதாவது: நேதாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் போஸ் வசதியான வாழ்க்கையை தவிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராட விரும்பினார். அவர் ஒருபோதும்...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. இதுகுறித்து உத்தர பிரதேச அரசு நேற்று கூறியதாவது: உலகின் மிகப்பெரிய மத விழாவான மகா கும்பமேளா பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 45 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று ஏற்கெனவே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கங்கை, யமுனை, புராணத்தில்...
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா விண்கலனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்காக திரவ உந்துவிசை அமைப்புடன் கூடிய க்ரூ மாட்யூல் (வீரர்கள் தங்கும் அறை) தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தை மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2 கட்டமான முதல் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்துவதற்கான ஆராய்ச்சிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த 2-ம் கட்ட திட்டத்துக்கான...
ரயிலில் தீவிபத்து என புரளி ஏற்பட்டதைத் தொடர்ந்து தண்டவாளத்தில் குதித்த 12 பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ்ன் மாவட்டம் மஹேஜி-பார்த் ஹடே ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை 5 மணியளவில் லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீபிடித்து விட்டது என யாரோ புரளியைக் கிளப்பினர். இதையடுத்து பயணிகள் சிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினர். ரயிலில்...
மகா கும்பமேளா குறித்தும் இந்து கடவுள்கள் பற்றியும் அவதூறு பரப்பியதாக 2 பத்திரிகையாளர்களை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர். உ.பி.யின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோட்வாலி நகர காவல்துறை அதிகாரி அலோக் மணி திரிபாதி கூறுகையில், கும்பமேளா குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட கம்ரான் அலி என்ற பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மதச் சின்னங்களை அவமதித்தற்காக இவர்...