Google search engine
தீவிரவாதிகள் சுரங்கம் தோண்டி ஊடுருவதை தடுப்பதற்காக ஜம்முவில் சர்வதேச எல்லை நெடுகிலும் 25 கி.மீ. தொலைவுக்கு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) அகழி தோண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடைசியாக கடந்த 2022-ல் எல்லையில் ஊடுருவல் சுரங்கப் பாதையை பிஎஸ்எப் கண்டறிந்தது. ஜம்முவில் அமைதி நிலவிய பல பகுதிகளில் கடந்த ஆண்டு தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற பல ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு...
பெங்களூருவில் விவாகரத்து மனுவை மனைவி திரும்பப் பெற மறுத்ததால் அவரது வீட்டின் முன்பு தீக்குளித்த கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள குனிகலை சேர்ந்தவர் மஞ்சுநாத் (39). வாடகை கார் ஓட்டுநரான இவர் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த நயனா ராஜுவுக்கும் கடந்த 2013-ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் இந்த தம்பதியினர் இடையே கடந்த...
மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுத தொழில்சாலையில் நேற்று காலை நடைபெற்ற வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் ஜவஹர் நகர் என்ற பகுதியில் ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வெடிமருந்து தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயம் அடைந்தனர். இங்கு தீயணைப்பு படையினர்...
ரஜவுரியில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நச்சுப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள பதால் என்ற மலை கிராமத்தில், கடந்த ஒன்றரை மாதங்களில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களில் 13 பேர் 3 முதல் 15 வயது கொண்ட சிறார்கள். இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின்...
உ.பி. மாவ் மாவட்​டத்​தில் ஒரு கிராமத்​தில் வசிப்​பவர் வங்கிக் கணக்​கில் ஒரே நாளில் ரூ.37 லட்சம் வரவு வைக்​கப்​பட்​டது. இதில் சந்தேகப்​பட்ட மத்திய பொருளாதார குற்​றப்​பிரி​வினர், இதுகுறித்து விசா​ரிக்க மாவ் மாவட்ட காவல்துறை கண்காணிப்​பாளரான (எஸ்​.பி.) ஜி.இள​மாறனுக்கு தகவல் அளித்​தனர். தமிழ்​நாட்​டின் மன்னார்​குடி கருவாச்​சிக் கிராமத்​தைச் சேர்ந்த தமிழர் இளமாறன், கால்நடை மருத்​துவம் படித்த பின்னர் 2016-ல் ஐபிஎஸ் தேர்​வில் வெற்றி பெற்​றவர். இவரது விசா​ரணை​யில், வங்கிக் கணக்கை வைத்​துள்ளவருக்கு...
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோம் (Guillain-Barre Syndrome) என்ற ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இதுவரை 73 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த நோய் குறித்து மகாராஷ்டிரா சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ஆட்டோ இம்யூன் நோய் என்றால் என்ன? ஆட்டோ இம்யூன் நோய்கள் (AID - Auto-Immune diseases) என்பவை, நம் நோய்...
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி நிறுவப்பட்டது. இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி நாளை வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மத்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த மக்களவைத் தேர்தலின்போது 96.88 கோடியாக இருந்தது. இது இப்போது 99.1 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 18 முதல் 29...
கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு பணிக்கு மத்திய அரசு எந்த நிதி உதவியும் வழங்கவில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். வயநாடு மறுவாழ்வுப் பணிக்கு, மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு நிதி பெறப்பட்டது என கேரள சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்எல்ஏ மொய்தீன் கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலில் கூறியதாவது: வயநாடு நிலச்சரிவுக்குப்பின்...
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மத்திய டெல்லியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாட்டின் 76-வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியில் வரும் 26-ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழா அணிவகுப்புக்கான முழு ஆடை ஒத்திகை கடமைப் பாதையில் விஜய் சவுக் முதல் செங்கோட்டை வரை நேற்று நடைபெற்றது. இதனால் மத்திய டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக...
குறைந்த முதலீட்டுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி டோரஸ் பொன்சி திட்டத்தில் 3,700-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ. 57 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டதாக மும்பை போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது பணமோசடி நடந்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில், மும்பை மற்றும் ராஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் 10-12 இடங்களை குறிவைத்து அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கியமான ஆவணங்கள்...