Google search engine
இந்திரா காந்தி அமைதிப் பரிசுக்கு முன்னாள் சிலி நாட்டின் அதிபர் மைக்கேல் பேச்லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை நேற்று இதை அறிவித்துள்ளாது. முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் வெளியுறவுத்துறை செயலருமான சிவசங்கர் மேனன் தலைமையிலான குழு, விருதுக்குரிய நபரின் பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சில அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக...
நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பிய பரஸ்பர குற்றச்சாட்டுகளால் அலுவல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே அதானி விவகாரத்தை விவாதிக்க கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், நாடாளுமன்றம் செயல்படுவதில் முட்டுக்கட்டை நீட்டித்து வருகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கவுரவ் கோகாய் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று அவை தொடங்குவதற்கு...
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 20 நாட்களில் அவர் மீது போடப்பட்ட 2-வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா...
ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகெங்கிலும் வெளியானது. முன்னதாக புதன்கிழமை இரவு இப்படத்தின் பிரிமியர் ஷோக்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பல திரையரங்களில் நடந்தன. இதில் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் நடந்த பிரிமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார்....
கர்நாடகாவில் நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்ட லிங்காயத்து மடாதிபதி சித்தகங்கா சிவகுமார சுவாமி கடந்த 2019-ம் ஆண்டு தனது 111-வது வயதில் காலமானார். அவருக்கு பெங்களூரு வீரபத்ர நகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த நவம்பர் 30-ம் தேதி இரவில் தார் பூசி அவமதிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் உணவு டெலிவரி ஊழியர் ஸ்ரீகிருஷ்ணா (33) என்பவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர்...
பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை சிரோமணி அகாலி தளம் ஆட்சியில் இருந்தது. அப்போது துணை முதல்வராக இருந்த சுக்பிர் சிங் பாதல் செய்த தவறுகளுக்காக அவருக்கு சீக்கிய மதத்தின் உயர் அமைப்பான அகால் தக்த் தண்டனை வழங்கியது. இதன்படி அமிர்தசரஸ் பொற்கோயிலில் சுக்பிர் சிங் பாதல் நேற்று முன்தினம் சேவை செய்தார். அப்போது காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். எனினும் அதிர்ஷ்டவசமாக சுக்பிர்...
கர்நாடகாவில் பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொல்லப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 16 இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர். கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரவீன் நெட்டூரு (28). கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
ரூ.2.5 கோடி ரொக்கம், ரூ.75 லட்சம் கார் வரதட்தணையுடன் மீரட் நகரில் நடைபெற்ற கோலாகல திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரிலுள்ள ரெசார்ட் ஒன்றில் அண்மையில் ஆடம்பரத் திருமணம் நடைபெற்றது. இது முஸ்லிம் மதத்தினரின் திருமணமாகும். இந்தத் திருமணத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது. ரெசார்ட் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்தேறியது. மேலும் மணமகன் வீட்டாருக்கு ரூ.2.5 கோடி ரொக்கம் அடங்கிய...
மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள...
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது, பொதுக்கூட்டம் ஒன்றில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கு சென்னைஎம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரி்த்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது,இதற்கிடையே, இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிஉயர் நீதிமன்றத்தில் எல்.முருகன் தாக்கல் செய்திருந்த மனு...