மகாராஷ்டிர புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர். அவரது தந்தை கங்காதர் ராவ் ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர் ஆவார். தற்போதைய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பட்னாவிஸின் தந்தை கங்காதர் ராவின் ஆதரவுடன் பாஜகவில் வளர்ந்தவர். அவரது மறைவுக்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் அரசியலில் கால் பதித்தார். ஆரம்ப காலத்தில் அவர் நிதின் கட்கரியின் ஆதரவாளராகவே இருந்தார்.
மகாராஷ்டிர பாஜகவில் நிதின் கட்கரிக்கு...
தேவேந்திர பட்னாவிஸ் வழக்கறிஞராகவும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகவும் பயிற்சி பெற்றவர். தனது புத்திசாலித்தனம் மற்றும் கூர்மையான விவாத திறன்களுக்காக நற்பெயர் பெற்றார். நாக்பூர் தென்மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ச்சியாக 6 முறை வெற்றி பெற்றுள்ளார்.
தேவேந்திர பட்னாவிஸ் (54) இளம் வயதில், தனது தந்தையை சிறையில் அடைத்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரைக் கொண்ட (இந்திரா கான்வென்ட்) பள்ளியில் படிப்பைத் தொடர மறுத்து விட்டார். அதன் பிறகு சரஸ்வதி வித்யாலயாவில்...
கடந்த நவம்பர் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. ஆனால் புதிய அரசு பதவியேற்க நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இதன் பின்னணி காரணங்கள் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:
பாஜக கூட்டணியில் பாஜக மட்டும் 132, ஷிண்டேவின் சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41...
நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் இன்று பேரணி செல்ல இருப்பதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து டெல்லி - ஹரியானா எல்லை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர்....
பாபாசாஹெப் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
1891ம் ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்த அம்பேத்கர் சட்ட மேதை, பொருளாதார நிபுணர், அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களைக் கொண்டிருந்தார். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராக விளங்கியவர். பட்டியல் சமூகத்தில் பிறந்தவரான அம்பேத்கர்,...
டிக்கெட்களுக்கான ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியத்தை ரயில்வே வழங்குகிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரு ரயில் டிக்கெட் 100 ரூபாய் என்றால் பயணிகளிடம் ரயில்வே நிர்வாகம் 54 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது. மீதமுள்ள 46 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் அனைத்து வகுப்பு...
ராணுவத்தில் ரூ.21,772 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் 5 நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியது.
கடற்படை பயன்பாட்டுக்கு 31 வாட்டர் ஜெட் அதிவேக படகுகள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சில் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த அதிவேக படகுகள் மூலம் கடற்கரை பகுதிகளில் ரோந்து, கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடற்கொள்ளை தடுப்பு பணிகளுக்கும் இந்த விரைவுப் படகுகள் ஈடுபடுத்தப்படும்....
கடற்படையின் அர்ப்பணிப்பு நாட்டின் பாதுகாப்பு செழிப்பை உறுதி செய்கிறது: பிரதமர் மோடி புகழாரம்
admin - 0
கடற்படையின் அர்ப்பணிப்பு உணர்வால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் செழிப்பு உறுதி செய்யப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நமது நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பினை ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் பாதுகாக்கும் நமது கடற்படை வீரர்களுக்கு இந்த கடற்படை தினத்தில் வணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வால்தான்...
மகாராஷ்டிர தேர்தலில் மாலை 5 மணிக்குப் பிறகு 7.8% வாக்குப்பதிவு குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில் இது சராசரி வாக்குப் பதிவுதான் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 235 தொகுதிகளை கைப்பற்றியது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி 48 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து தேர்தல் முடிவுகளின் முரண்பாடுகள்...
இந்திய கடற்படைக்கு இரண்டாவது திருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோனை அதானி டிபென்ஸ் நிறுவனம் விநியோகித்துள்ளது.
ராணுவத் தளவாட தயாரிப்பில் அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள மையத்தில் திருஷ்டி-10 ஸ்டார்லைனர் என்ற ஆளில்லா விமான (ட்ரோன்) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் ட்ரோன் இந்திய கடற்படைக்கு கடந்த ஜனவரி மாதமும், 2-வது டிரோன் தரைப்படைக்கு கடந்த ஜூன் மாதமும் விநியோகித்தது.
இந்நிலையில் 3-வதாக தயாரித்த ட்ரோனை, கடற்படைக்கு...










